بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: டிசம்பர் 2009


இஸ்லாமிய அரசில் மனித உரிமைகள்

>> செவ்வாய், 29 டிசம்பர், 2009

1.      உயிர் மற்றும் உடைமைப் பாதுகாப்பு:

இறுதி ஹஜ்ஜின் போது முஹம்மத் நபி(ஸல்) கூறினார்கள்:

(இறைவனை நீங்கள் சந்திக்கும் இறுதித் தீர்ப்பு நாள் வரை) ஒருவர் மற்றவரின் உடைமையை, உயிரை பறிக்கக் கூடாது.

முஸ்லிம் நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத குடிமக்களின் உரிமைகளைக் குறித்து முஹ்ம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஓரு திம்மியை (முஸ்லிமல்லாத குடிமகனை) கொலை செய்பவன் சுவனத்தின் வாடையைக்கூடநுகர முடியாது.

2.      மனித மாண்பின் பாதுகாப்பு:

  குர்ஆன் கூறுகிறது:

          1.      ஒருவரையொருவர் பரிகாசம் புரியாதீர்.

          2.      அவதூறு கற்பிக்காதீர்

         3.      பட்டப்பெயர் சூட்டி இழிவுபடுத்தாதீர்.

          4.      புறங்கூறாதீர், தரக்குறைவாக பேசாதீர்.

3.      தனிநபர் வாழ்வும் புனிதமும்:

          1.      உளவு பார்க்காதீர்

          2.      உரியவரின் அனுமதியின்றி ஒருவரின் வீட்டுக்குள் நுழையாதீர்

 

4.      தனிநபர் சுதந்திரம் :

எந்தவொரு மனிதனின் குற்றமும் பகிரங்கமாக நீதிமன்றத்தில் நிரூபணமாத வரை, அவரை சிறையிலடைக்கக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. சந்தேகத்தின் அடிப்படையில் மட்டும் ஒருவரை சிறையிலடைக்கக் கூடாது. நீதிமன்றத்தில் ஒருவரைப் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்பளிக்காமல் சிறையிலடைக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

5.      கொடுங்கோன்மைக்கு எதிரான பாதுகாப்பு:

இஸ்லாம் வழங்கிய மனித உரிமைகளில் ஒன்று அரசுக் கொடுங்கோன்மைக் கொதிரான பாதுகாப்பாகும்.

குர்ஆன் கூறுகிறது:

தீங்கான சொற்களை வெளிப்படையாக போசுவதை இறைவன் விரும்புவதில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர் பேசலாம்      (4:148)

 

இஸ்லாத்தில் அனைத்து அதிகாரங்களும் இறைவனுக்கே உரியவை. முனிதனுக்கு வழங்கப்பட்டதெல்லாம் பிரநிதிக்குரிய அதிகாரமே! அடைக்கலமாக அளிக்கப்பட்ட அதிகாரமே ஆகும்.

இத்தகைய அதிகாரங்களைப் பெற்றவர், மக்களின் முன தூய்மையானவராக அப்பழுக்கற்றவராக காட்சியளிக்க வேண்டும். அந்த மக்களின் நன்மையை ஒட்டியே அதிகாரம் பயன்பட வேண்டும்.

இதனை உறுதிப்படுத்தி அப+பக்ர்(ரலி) அவர்கள் பதவியேற்ற பின் தம்முடைய முதல் உரையில் கூறுகிறார்.

நான் நல்லது செய்தால் என்னோடு ஒத்துழையுங்கள். நான் தவறு செய்தால் என்னைத்திருத்துங்கள். இறைவனின்-இறைத்தூதரின் ஆணைகளை நான் நிறைவேற்றும் வரை எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் வழிதவறி நடந்தால் எனக்கு கீழ்ப்படிய வேண்டும்.

6.      கருத்துச் சுதந்தரம்:

குடிமக்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்தரத்திற்கு இஸ்லாம் முழு உத்திரவாதமளிக்கிறது. ஆனால், ஒரு நிபந்தனை. ஓழுக்க மேம்பாட்டிற்கும், வாய்மைப் பரவுதலுக்கும் துணையாக அது அமைய வேண்டும். கொடுங்கோன்மை மற்றும் தீங்கு அதிகரிக்கலாகாது.

குருத்துச் சுதந்தரம் பற்றி மேலைநாட்டினர் கொண்டுள்ள கருத்தோட்டத்தைவிட இஸ்லாம் அளித்துள்ள கருத்துச் சுதந்தரம் சிறப்பானது. ஏந்தக் காரணத்தாலும் தீமைகள், அநியாயங்கள் பெருகுவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. விமர்சனம் என்ற பெயரில் பழி, தாக்குதல், அத்துமீறல்களை இஸ்லாம் அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் இறையானை ஏதேனும் உள்ளதா என்று முஸ்லிம்கள் முஹ்ம்மத் நபி(ஸல்) அவர்களை விசாரிப்பது வழக்கம். அப்படி இறைக்கட்டளை எதுவும் வெளியாகவில்லை என்று கூறினால், முஸ்லிம்கள் வெளிப்படையாக, மனம்விட்டு தத்தமது கருத்துக்களைக் கூறுவார்கள்.

7. கூடிவாழும் உரிமை

கட்சி, மன்றங்கள் அமைத்து மனிதர்கள் கூடி வாழும் உரிமை மதிக்கப்பட வேண்டும். இந்த உரிமையும் ஒரு சில பொதுநல விதிகளுக்குட்பட்டே இருக்கவேண்டும்.

8.      தீர்மானிக்கும் உரிமை

இஸ்லாம் கூறுகிறது.

'இறைமார்க்கத்தில் நிர்ப்பந்தம் எதுவும் இல்லை'     (2.256)

சர்வாதிகார சமூக அமைப்பில் தனிநபர் உரிமை என்பதே எதுவும் இல்லை. அரசிற்க்கு அளிக்கப்படும் வரையற்ற அதிகாரங்கள், மனித அடிமைத்தனத்தையும், கீழ்மையையும் உண்டாக்கும். ஒரு காலத்தில் மனிதன் மீது முழு அதிகாரம் செலுத்தும் அடிமை முறை உலகில் அமலில் இருந்தது. இப்பொழுது அத்தகைய அடிமை முறை சட்டப+ர்வமாக ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அடிமைத்துவத்திற்குச் சமமான தனிநபர் கட்டுப்பாடுகளை சர்வாதிகார சமூக அமைப்பு விதித்துள்ளதை நாம் கண் கூடாகவே பார்க்கலாம்.

9.      சமய உணர்வுகளுக்குப் பாதுகாப்பு:

சுயதீர்மான உரிமை மற்றும் கருத்துச் சுதந்தரத்தை இஸ்லாம் விலியுறுத்துகிற நேரத்தில் தனிநபரின் சமய உணர்ச்சிகளுக்கு உரிய மதிப்பளிக்கவும் தவற வில்லை. சமய விவகாரத்தில் ஒருவரின் உரிமையை ஆக்கிரமிக்கும் வகையில் எந்தச் செயலும் கூடாது. எந்தப் பேச்சும் கூடாது என இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

10.   தவறான தண்டனையிலிருந்து பாதுகாப்பு.

வேறொருவர் செய்த குற்றத்திற்காக ஒருவர் தண்டிக்கப்படுவதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

குர்ஆன் தெளிவாகக் கூறுகிறது.

ஓருவரின் சுமையை மற்றவர்கள் சுமக்கமாட்டார்கள்      (16:164)

11.    வாழ்வாதார அடிப்படைக்கான உரிமை:

தேவையுள்ளோருக்கும் வறியோருக்கும், உரிய உரிமைகளை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆவர்களுக்கு உரிய, நியாயமான தேவைகள் நிறைவுசெய்யப்பட வேண்டும்.

இறைவன் கட்டளையிடுகிறான்.

ஆவர்களின் சொத்தில் வறியவர்களுக்கு, தேவையுளோருக்கும் உரிமையுண்டு. (70:15)

12.   சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

சுட்டத்தின் பார்வையில் அனைத்து குடிமக்களுக்கும் பரிப+ரண, முழுமையான உரிமையை இஸ்லாம் வழங்குகிறது.

13.   ஆட்சியாளர் விதிவிலக்கல்ல.

ஓர் உயர்ந்த வம்சத்து பெண் திருட்டுக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டாள், அந்த வழக்கு முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் முன் கொண்டுவரப்பட்டது. திருட்டுக் குற்றத்திலிருந்து அவளை விடுவிக்க வேண்டும். தண்டிக்கக் கூடாது என்று சிலர் பரிந்துரை செய்தனர். செய்தனர். அப்பொழுது முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினர், சாமாகியர்கள் தவறு செய்தால் தண்டிப்பார்கள். மேட்டுக்குடிமக்கள் அதே தவறைச் செய்தால் தப்பிக்கவிடுவார்கள். என் உயிர் யார் கைவசம் உள்ளதோ. ஆந்த அல்லாஹ் வின் மீது ஆணையாக, முஹம்மதின் மகள் ஃபாத்திமா இதே தவறை செய்தாலும் நான் அவர் கையை துண்டிக்காமல் விடமாட்டேன்.

14.   அரசியன் விவகாரங்களில் கலந்து கொள்ளும் உரிமை.

ஆவர்கள் பணிகள் அவர்களுக்குள் கலந்தாலோசனை மூலமாகவே(நடைபெறும்) (42:38)

ஆலோசனை சபை அல்லது சட்டமன்றம் என்பதன் கருத்து இதுதான்.

ஆரசின் தலைவர், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுதந்தரமாக, சுயேட்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

சட்ட பூர்வ பாதுகாப்பினை நல்கி மேற்கூறிய மனித உரிமைகளைச் சாதிப்பதில் இஸ்லாம் நாட்டம் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல, மிருக இயல் புகளைவிட்டு வெளியேறி, மனிதமாண்புகளை மேற்க்கொள்ளவேண்டும். இரத்தபந்தம், இனமேன்மை, மொழி வெறி, பொருளாதார மேலுரிமை போன்ற குறகிய வட்டங்களை விட்டு பரந்த நோக்கின்பால் வரவேண்டும். அந்தரங்க சத்தியோடு சர்வதேச சகோதரத்துவத்தை நிறுவி வாழ வேண்டும் என இஸ்லாம் மனிதகுலத்திற்கு அறைகூவல் விடுத்து அழைக்கிறது. 

 

Read more...

6 வது கட்டுரைப் போட்டி பரிசளி ப்பு விழாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – அபுதாபி!

>> திங்கள், 21 டிசம்பர், 2009











சமுதாய நல்லிணக்கத்தை பேனுவதிலே தமிழகத்தில் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துள்ள மாபெரும் பேரியியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
•    ரத்த தானத்திலே முதலிடம்
•    மனிதநேய உதவிகளில் முன்னோடி
•    பேரிழப்புகளின்போது துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பதிலே விரைவு
•    சமுதாய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு

இப்படி சமுதாய அக்கறையுடன் செயல்படும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வழி முறையை பின்பற்றி அதன் வளைகுடா பகுதி கிளையான அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் முஸாபா ஐகாட்சிட்டியும் இணைந்து இஸ்லாமிய மார்க்க்த்தினை பிற மத சகோதரர்களும் தெரிந்து கொள்ளவும் மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையிலும் கடந்த ஆறு வருடங்களாய் தொடர்ந்து பிற மத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரை போட்டியை பல்வேறுபட்ட தலைப்புகளில் நடத்தி வருகின்றது.

அதனடிப்படையில் இந்த வருடமும் 'இன்றைய கலாச்சார சீரழிவுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் கட்டுரை போட்டியை அறிவிப்பு செய்திருந்தது எந்த வருடமும் இல்லாத வகையிலே இந்த வருடம் பிற மத சகோதர சகோதரிகளிடமிருந்து அதிகமான கட்டுரைகள் வந்து சேர்ந்தது.

இப்படி வந்த கட்டுரைகளில் சிறந்த மூன்று கட்டுரைகளை ஜமாஅத்தின் தேர்வுகுழு தேர்வு செய்தது.

தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கு பரிசளித்து பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி கடந்த 18.12.2009 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அபுதாபி எலக்ட்ரா தெருவில் அமைந்துள்ள அல் இப்ராஹீம் ரெஸ்டாரென்ட் பார்டிஹாலில் நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட பிற மத சகோதர சகோதரிகள் நிகழச்சியில் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் முஹமமதுஷேக் அவர்கள் தலைமை தாங்கினார்கள். மூத்த நிர்வாககுழு உறுப்பினர் யூசுப்அலி அவர்கள் வரவேற்புரை நிழ்த்தினார்கள்.  அதன்பின்னர் வெற்றி பெற்ற முதல் மூன்று கட்டுரையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் கட்டுரை எழுதிய அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் விபரம்:
•    முதல் பரிசு சகோ. இராமச்சந்திரன்
•    
இரண்டாம் பரிசு சகோ. ஃபிரான்ஸிஸ் ஜான்ஸன்
•    
மூன்றாம் பரிசு சகோ. வினோத் மற்றும்

                         சகோதரி. ஸ்ரீதேவி முத்துக்குமரன்


இதனை தொடர்ந்து இந் நிகழ்ச்சியின் மிக முக்கிய அங்கமான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் பிற மத சகோதர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமின் இபுராஹீம் அவர்களின் இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற சிற்றுரையுடன் ஆரம்பமானது.

இந் நிகழ்சிக்கென ஒதுக்கப்பட் நேரத்தில் பிற மத சகோதரர்கள்  16 கேள்விகளை கேட்டார்கள் அவர்களுக்கிருந்த ஐயங்களை போக்கும் வகையிலே சகோதரர் ஹாமின்இபுராஹீம் மிக தெளிவாக பதிலளித்தார்கள் இப்படி பட்ட நிகழ்சிகளில் கடந்த காலங்களில் முஸ்லீம்கள் என்றாலே உலகில் நடக்கும் மொத்த தீவிரவாத செயல்களுக்கும் குத்தகைகாரர்கள் என்ற சந்தேகத்துடன்  கேள்விகள் கேட்க்கப்படும் நிலைகள் குறைந்து இப்போது இஸ்லாம் பற்றியும் இஸ்லாமியர்களின் செயல்கள் குறித்தும் கேள்விகள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது ஓர் சகோதரர் கேட்ட கேள்வி குறிப்பாக இவர்கள் தவ்ஹீத் கொள்கை பேசுபவர்களையும் உற்று நோக்குகின்றார்கள் என்பதை உணரமுடிகின்றது 'வரதட்சனைக்கு எதிராக பேசக்கூடிய உங்கள் சகோரதரர்கள் தடம் மாறி வரதடசனை வாங்குகிறார்களே அது ஏன் என்று கேட்கின்றார்' மேலும் RSS இயக்கத்திலே பயிற்சி பெற்ற ஒரு இளைஞர் நம்முடைய இந் நிகழ்ச்சிக்கு வருகை தந்து தன்னை ஓர் RSS காரன் என்று அறிமுகம் செய்து கொண்டு கேள்வி கேட்டது குறிப்பிடதக்கது.

கேள்வி கேட்ட அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிற மத சகோதர சகோதரிகளுக்கு  குறுந்தகடுகள் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற நூலும் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக ஜமாஅத்தின் துணைத்தலைவர் இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)



Read more...

2009ஆம் ஆண்டு கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

>> ஞாயிறு, 13 டிசம்பர், 2009






Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP