بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: அக்டோபர் 2009


என்னைப் போல் ஒருவனா நீ? (சினிமா விமர்சனம் : ஞாநி)

>> சனி, 17 அக்டோபர், 2009

`உன்னைப் போல் ஒருவன்' என்று படத்தின் தலைப்பு சொல்கிறது.
பார்வையாளனான என்னைப் பார்த்து உன்னைப் போல் ஒருவன் என்று சொல்வதாகத்தான் பெரும்பாலும் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். அது சரியான அர்த்தம்தானா ?!

படத்தில் பெயர் இல்லாத நாயகனே, என்னைப் போல் ஒருவனா நீ?

நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி, மதம், மொழி, இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன்.

குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர, மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.

நீ என்னைப் போல் ஒருவனா? நிச்சயம் இல்லை.

எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவருப்பானது. உனக்கு அப்படியில்லை. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.

மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும் , தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேருந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தைத்தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறைகளில்தான் இருக்கிறார்கள். அவர்களை விசாரணையில்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை.

இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடி மருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.

உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா ? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய்? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள்/வாங்குகிறவர்கள் எல்லாரும் உன்னைப் போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன?

இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே நீ பேசுகிறாய். அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய்.

எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.

அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.

ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது.

நீ என்னைப் போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுபவர் மோடியானாலும் சரி, முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.

உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால், யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய்?

படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான். அதுதான் அசல் அர்த்தம். நாங்கள்தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அந்தக் காவல் அதிகாரி யார்? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லாரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால்தான் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று மிரட்டுபவர் அவர். முழு அதிகாரமும் போலீஸிடம் இருந்தால்தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்லமுடியும் அல்லவா? அவர் கருத்தும் உன் கருத்தேதான்.

கடைசியில் நீ கேட்டபடி அந்தத் தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.

நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல்தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார். அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக் கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே. உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்தத் தீவிரவாதிகளை விசாரணை இல்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதுதான் உண்மை.

கடைசியில் நீ இருக்கும் இடத்தையும் உன்னையும் கண்டுபிடித்த பிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கை குலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன்? நீ அவரைப் போல் ஒருவன் என்பதனால்தான்.

காவல் துறை என்கவுன்ட்டர் என்ற பெயரில் விசாரணை இல்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன் படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி.

நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப் போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.

* * * * * * * *
சென்ற வருடம் மும்பையில் என் பிரிய நடிகர் நசிருதீன் ஷா நடித்த `எ வெட்னெஸ்டே', `ஷூட் ஆன் சைட்' என்ற படங்களைப் பார்த்ததும் இரண்டுமே தீவிரவாதம் தொடர்பானவை என்பதால், ஒப்பிட்டு எழுத நினைத்தேன். தமிழ் வாசகர்கள் இவற்றை டி.வி.டி.களாகக் கூட பார்க்கும் வாய்ப்பில்லாத நிலையில் எழுதுவதற்கான உந்துதல் குறைந்துபோய் விட்டது.

கமல்ஹாசன் `வெட்னெஸ்டே'வை தமிழில் தயாரிக்கிறார் என்ற செய்தி வந்ததும், நிச்சயம் கமல் என்ற ஸ்டாரால் நசீரின் யதார்த்தமான நடிப்பைத் தரமுடியாது என்பதால், தமிழ்ப் படம் ஹிந்தியின் தரத்தில் இருக்காது என்று கருதினேன். டெல்லி கணேஷ் மாதிரி ஒருத்தர் நடிக்க வேண்டிய ரோலில் கமல் நடித்தால் என்ன ஆகுமோ அதுதான் தமிழ் வெட்னெஸ்டேவுக்கு ஆகியிருக்கிறது.

என்னைப் பார், என் நடிப்பைப் பார் என்று ஒவ்வொரு ஃபிரேமிலும் சொல்லிக் கொண்டே நடிக்கும் பாணியில் கமல் என்ற நல்ல நடிகர் சிக்கிக்கொண்டு பல காலம் ஆகிறது. கமல் என்ற நல்ல திரைக்கதையாசிரியர், இயக்குநரையும் அந்த நடிகர் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவது இன்னொரு சோகம்.

அதனால்தான் படம் முழுவதும் காமன் மேன் சூப்பர் மேனாகவே இருக்கிறான். ஒருவேளை கமல் நடிக்காமல் இயக்கத்தை மட்டும் செய்கிற எதிர்காலத்தில் இது மாறக்கூடும். காமன் மேனை காமன் மேனாகவே காட்டக் கூடும்.

இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது. குத்துப்பாட்டு, ஆக்ஷன், ஆபாசம், சென்டிமெண்ட் மசாலாக்கள் இல்லாமல் ஒரு படம் ஆதரிக்கப்படுவது மகிழ்ச்சிதான். ஆனால், இந்தப் படமும் வணிக ஃபார்முலாவுக்குள்ளேதான் இருக்கிறது என்பதும் வித்தியாசமான படம் என்ற முகமூடிக்குள் இருந்துகொண்டு ஆபத்தான கருத்துகளைப் பரப்புகிறது என்பதும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.

சென்சார் விதிகளுக்கு விரோதமான முறையில் டி.வி. பப்பெட் ஷோ வழியே பகிரங்கமான பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம்களை கீழ்த்தரமாகக் கிண்டல் செய்யும் வசனங்கள், வேலைக்குச் செல்லும் திறமையும் உறுதியும் உடைய நவீனப் பெண்ணை வேண்டுமென்றே சிகரெட் பிடிப்பவளாகக் காட்டும் வக்கிரம், கம்ப்யூட்டர் மேதை என்றால் அவன் பார்ப்பனனாகத்தான் இருப்பான் என்று குறிப்பாக உணர்த்தும் அபிவாதயே வசனங்களின் ஜாதியம் போன்றவை ஒரிஜினல் ஹிந்தியில் இல்லாதவை. கமல் தமிழுக்கு அளித்திருக்கும் `கொடைகள்' இவை.

பத்துப் பேரை ஒரே ஆள் தனியாக அடித்து வீழ்த்தும் ஹீரோவும் உன்னைப் போல் ஒருவன் ஹீரோவும் ஒருவன்தான். ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வைப்பது முதல் க்ைளமேக்ஸில் குண்டு வைத்த ஜீப்பை ஒரு பொட்டல் காட்டில் நிறுத்தி வைப்பதுவரை மொட்டைமாடியில் தனியாக இருந்துகொண்டே சாதிப்பது எல்லாம் விஜய் பட ஃபேண்ட்டசியின் இன்னொரு வடிவம்தான்.

மாற்று சினிமா இது இல்லை.இதுவும் இன்னொரு ஏமாற்று சினிமாதான்..
நன்றி: குமுதம்

நன்றி : குமுதம் வார இதழ் 14.10.2009

ஆர்.எஸ்.எஸ். தனது கொள்கை பரப்பு செயலாளராக கமலை அறிவிக்கலாம்.



Now, send attachments up to 25MB with Yahoo! India Mail. Learn how.

Read more...

பெருமானாரின் இறுதி பேருரை

>> ஞாயிறு, 11 அக்டோபர், 2009


1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு….பெருமானார்(ஸல்) அவர்கள் அரபாத் பெருவெளியில் உரை நிகழ்த்தினார்கள்:-
அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன் வைத்தார்கள்.

1.(
மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில், அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள் மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.
இந்த நாளும், இந்த மாதமும், இந்த நகரமும் பரிசுத்தமானவை. அதுபோலவே உங்களது உயிரும், உடைமையும்,கண்ணியமும் பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாக இருக்க வேண்டும். யாரும் அவற்றில் தலையிடவோ, அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலே இவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.(
மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவரது குடும்பமத்தினருக்கல்ல..,அவருக்கே வழங்கப்படும். தந்தை தன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம் செய்யவேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோ தண்டிக்கப்படமாட்டாது.

3.(
மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்பு ஏற்பட்ட)கொலைகளுக்கும், கொடுஞ்செயல்களுக்கும், பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது. முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின் கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும் மடமையும் இனி கூடாது.)

4.(
மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது. அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. (கடன்பட்டவர்கள் முதலை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனது பெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்கு வரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5..
மக்களே! பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொகொள்ளுங்கள். உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமை உள்;ளது போல், உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீது உரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட (அமானிதம்) அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின் பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப் பொறுப்பேற்றிருக்கிறீர்கள். அவர்களின் கடமை, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது. மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம் ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோல) உங்களது கடமை நீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி (அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். இறைவனுக்குப் பயந்து அவர்களது) நன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.
மக்களே! எனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள், கேட்டு நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எல்லா முஸ்லிம்களும் ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள! ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி, மற்றவர் எடுப்பது (ஹராம்) தடுக்கப்படுகிறது. அநியாயம் செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள். உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன். அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.

முதலாவது இறைவனின் திருவேதமான திருக்குர்ஆன்!


இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள் (ஸுன்னத்)!

7.
மக்களே! எனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்) இல்லை. உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லை. தெரிந்து கொள்ளுங்கள்! உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையே வணங்குங்கள். உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத் தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.

ரமளான் (என்னும் புனித) மாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள். உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டு) உங்ளைப் பரிசுத்தப் படுத்துவதற்காக வழங்கி வாருங்கள். உங்கள் இறைவனின் இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றி வாருங்கள். உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ள சுவனத்திற:குச் செல்வீர்கள்.

8.
மக்களே! உங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான். எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிவிடவேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனை வணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்து) முற்றிலும் நிராசையடைந்து விட்டான். ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு (உடன்பட்டு) தலைவணங்குவீர்கள். அதன் மூலம் அவன் மகிழ்சியடைவான். ( எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்கு இசைந்துவிடாதீhகள்)

9.
மக்களே! அறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே!

இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி (அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்ல. அதுபோல் அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல.. வெள்ளை நிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோ, கறுப்பு நிறத்தவர் வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்ல. அனைவரும் ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர், நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனது காலின் போட்டு மிதிக்கிறேன்..) சொற்பொழிவை முடித்த வள்ளல் பெருமானார்(ஸல்) வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரை நோக்கிக் கேட்டனர்.

10. (
மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்து விட்டேனா? இறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா? என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்பு நாளில் என்ன பதில் கூறுவீர்கள்?

'
நிச்சயமாக (இறைவனது கட்டளைகளை) எங்களுக்கு) அறிவித்துவிட்டீர்கள்! இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை (நபித்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள் வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும் வழங்கிவிட்டீர்கள். என்றும் சாட்சியம் கூறுவோம்.!'

அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்ட எழுந்தது இந்தப் பேரொலி.

இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கி தங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது! அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!

இறைவா!நீயேஇதற்கு சாட்சி! இறiவா!நீயே இதற்கு சாட்சி!

இறைவா! நீயே இதற்கு சாட்சி! என்று மும்முறை முழங்கினார்கள்.

மேலும் இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கும் என்னுடைய இந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள். ஏனெனில் நேரில் கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்கு விளக்கமுடையோராக இருப்பர்.

(
ஆதார நூற்கள்: புகாரி,முஸ்லிம்,அபூதாவூது,திர்மிதி,முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்,இப்னுஹிஷhம்,ரஹமத்துன் லில் ஆலமீன், முஹம்மது ரஸூலுல்லாஹ்

Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP