بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: மே 2010


பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் பேசுகிறார்

>> வெள்ளி, 7 மே, 2010

 பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் பேசுகிறார்:

பெரியாருக்கு தாசனாக இருந்து அல்லாஹ்வின் தாசனாக மாறிய பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியது நாட்டில் பரபரப்பான செய்தியானது.

தவ்ஹீத் ஜமாஅத் யாரையும் மேடையில் ஏற்றுவதாக இருந்தால் அவர்களின் கொள்கை கோட்பாடுகளைப் பற்றி அறிந்து கொண்ட பிறகே மேடை ஏற்றும் என்பதால் அவசரப்படாமல் இருந்தோம்.

இந்த நிலையில் பேராசிரியர் அவர்களிடம் பல்வேறு தனி நபர்களும், இயக்கத்தவரும் பீஜே உங்களைப் பற்றி கண்காணிக்கப் போவதாகக் கூறியுள்ளார்; எனவே அவரைப் பற்றி பேட்டி கொடுங்கள் என்று கேமராவும் கையுமாகச் சென்ற போது அவர்களை அவர் விரட்டியடித்து விட்டார். அத்துடன் ரியாத்தில் உள்ள நமது தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளுடன் நல்ல முறையில் கலந்துரையாடியது மட்டுமின்றி நான் ஏ.ஆர். ரஹ்மான் போல் இஸ்லாத்துக்கு வரவில்லை. நன்கு விளங்கி ஆய்வு செய்து விட்டே வந்துள்ளதால் ஏகத்துவக் கொள்கையில் நான் உறுதியாக இருப்பவன். இதை பீஜேவிடம் சொல்லி விடுங்கள். தாயகம் சென்றதும் நானே பீஜேயைச் சந்திப்பேன் என்றும் அவர் ரியாத் நிர்வாகிகளிடம் கூறினார்.

இதை ரியாத் நிர்வாகிகள் தலைமைக்குத் தெரிவித்த போது அவர் நம்மை வந்து சந்திக்க வேண்டாம். நாமே அவரைச் சந்திக்க வருகிறோம் எனச் சொல்லி அவரது இல்லம் சென்றோம்.

பீஜே, பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத், பொருளாளர் சாதிக் ஆகியோர் டாக்டர் அப்துல்லாஹ்வை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

வீட்டுக்குச் சென்றதும் ஜம்ஜம் தண்ணீரும் அஜ்வா பேரீச்சம் பழமும் தந்து உபசரித்தார்.

 அப்போது நடந்த உரையாடலை நேயர்களுக்குத் தருகிறோம்.

இனி டாக்டர் அப்துல்லாஹ் கூறுகிறார்:

நான் ஷிர்க் இணை வைத்தலைக் கடுமையாக எதிர்ப்பவன். தர்காவாதிகளிடமே இதைத் தெளிவாகச் சொல்பவன். பைத்தியங்கள் ஏர்வாடி தர்காவுக்குச் செல்லலாமா என்று என்னிடம் கேட்ட போது ஏர்வாடி போனால் தான் பைத்தியம் உண்டாகும் என்று கூறினேன்.

மனோதத்துவ டாக்டர் என்ற முறையில் கூறுகிறேன். ஒருவன் தான் சொல்வதற்குத் தானே முரண்படுவதற்குப் பெயர் தான் மனச்சிதைவு என்பார்கள். அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று ஒரு பக்கம் நம்பி விட்டு இன்னொரு பக்கம் தர்காவை நம்புவது முரண்பாடு இல்லையா? தாயத்துகளைக் கட்டிக் கொள்வது முரண் இல்லையா? இதனால் தான் முரண்பாடான நம்பிக்கையுள்ள தர்காவாதிகளை நான் மனநோயாளி என்கிறேன்.

மேலும் குர்ஆனும் நபி வழியும் மட்டும் தான் இஸ்லாத்தின் ஆதாரம் என்று நீங்கள் கூறுவதையும் நான் ஏற்கிறேன். மத்ஹப் இன்னும் பல பிரிவுகளை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனக்கு மனிதனிடம் எந்தத் தேவையும் இல்லை. அல்லாஹ் எனக்கு எல்லா வச்தியும் தந்துள்ளான். உண்மையை நான் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இதை எல்லா இடங்களிலும் நான் தெளிவாகக் கூறி வருகிறேன். சுன்னத் ஜமாஅத் காரர்கள் என்னைச் சந்திக்க வரும் போது இதை அழுத்தமாகக் கூறி வருகிறேன். நான் எதையும் எதிர்பார்த்து இஸ்லாத்துக்கு வரவில்லையே?

பீஜேயாகிய உங்களின் தமிழாக்கத்தையும் நூல்களையும் நான் படித்துள்ளேன். உரைகளையும் கேட்டுள்ளேன். இன்னும் பலருடைய தமிழாக்கத்தையும் நான் வாசித்துள்ளேன். எல்லாத் தமிழாக்கத்திலும் உங்கள் தமிழாக்கம் தான் முஸ்லிமல்லாதாரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்ப்பதாக உள்ளது என்று நான் எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறேன்.

மஸ்ஜித்களில் நடந்த கூட்டங்களில் மனிதர்கள் இரண்டு வகையில் உள்ளனர். இஸ்லாத்துக்கு வந்தவர்கள்; வர இருப்பவர்கள் ஆகிய இரண்டு பிரிவுகள் உள்ளனர். இஸ்லாத்துக்கு வர இருப்பவர்களுக்கு குர்ஆனைக் கொடுக்க விரும்பினால் பீஜே மொழி பெயர்த்து மூன் பப்ளிகேசன் வெளியிட்ட தமிழாக்கத்தைக் கொடுங்கள். அது தான் குர்ஆனை விளங்கும் வகையில் எளிதாக உள்ளது என்று நான் கூறினேன்.

உங்களுடைய தமிழாக்கத்தில் உள்ள 26 ஆம் பக்கம் ஒன்றே போதும். (எட்டாவது பதிப்பில் 29 ஆம் பக்கம்) இதில் எடுத்துக் காட்டும் சான்றுகளை ஒருவன் படித்தால் அவனை இஸ்லாம் ஈர்க்கும் வகையில் உள்ளது.

எத்தனையோ தமிழாக்கங்களில் சிந்திப்பது இதயம் என்று மொழி பெயர்த்த இடங்களில் நீங்கள் உள்ளம் என்று மொழி பெயர்த்து உள்ளீர்கள். இதயத்துக்கும், சிந்தனைக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இது சிறப்பாக உள்ளது.

அது போல் அலக் என்பதற்கு அட்டைப் பூச்சி என்றும் தொங்கிக் கொண்டிருப்பவை என்றும் பலவாறாக விளங்காமல் மற்றவர்கள் மொழி பெயர்ர்த்திருக்கும் போது கருவுற்ற சினை என்று அனைவருக்கும் விளங்கும் வகையில் மொழி பெயர்த்துள்ளீர்கள். இதை எல்லாம் நான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன்.

தனது சொந்த வாழ்க்கை பற்றிக் கூறும் போது:

எனக்கு இரண்டு மகன்கள். ஒருவருக்குத் திருமணம் ஆகி விட்டது. அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இன்னொரு மகனுக்குத் திருமணம் ஆகவில்லை.

அவர்கள் இஸ்லாதை ஏற்காவிட்டாலும் நான் இஸ்லாத்தை ஏற்றதில் எந்த மறுப்பும் அவர்களுக்கு இல்லை. எங்கள் தந்தை எந்த முடிவு எடுத்தாலும் சரியாக யோசித்துத் தான் எடுப்பார் என்பது தான் எனது பிள்ளைகளின் நிலை.

என் மனைவியை ஓரளவு புரிய வைத்துள்ளேன். அவர்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் உம்ராவுக்கு அழைத்துச் செல்ல இருக்கிறேன் என்ற சந்தோசமான செய்தியையும் தெரிவித்தார்.

இப்போது நான் மனநோயாளிளுக்கு மாடியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சை அளிக்கிறேன். கலிபோர்னியா பல்கலைக் கழகம் ஒன்றில் மூன்று மாதம் விசிட்டிங் புரபசராக இருக்கிறேன், மற்ற நாட்களில் மனச் சிதைவுக்கான மருத்துவத் தொழில் செய்கிறேன்.

என்று மனம் விட்டு அனைத்தையும் பரிமாறிக் கொண்டார்.

பேராசிரியர் அப்துல்லாஹ் அவர்களைப் பொருத்தவரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் போல் யாருக்கும் அஞ்சாமல் உண்மையை உரத்துச் சொல்வதில் உறுதியாக் இருப்பதை அறிய முடிகிறது.

போகும் இடமெல்லாம் ஷிர்க், பித்அத் ஆகியவைகளைக் கண்டித்துப் பேசுவதால் அவருக்குக் கடும் எதிர்ப்புக் கொடுப்பார்கள். கொள்கைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தவ்ஹீத் ஜமாஅத் மட்டுமே எதிர்காலத்தில் அவரைப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை அவரது உரையடல் உறுதி செய்தது.

அனைத்து சீடிகளும் புத்தகங்களும் நம் சார்பில் கொடுத்த போது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அவரைச் சந்திக்கும் பிரபலங்களுக்கு வழங்கிட ரியாத் மண்டலம் சார்பில் 25 திருக்குர்ஆன் தமிழாக்கமும் பல்வேறு தலைப்புகளில் சீடிகளூம் நூல்களும் வழங்கப்பட்டன.

இந்த உரையாடலை கம்போஸ் செய்து பேராசிரியரிடம் காட்டி அவரது கையொப்பம் பெற்றே வெளியிடப்படுகிறது.

குறிப்பு: பேராசிரியர் அவர்கள் மக்கா மஸ்ஜித் கூட்டத்திலும் பீஜேயின் தமிழாக்கம் குறித்து நம்மிடம் சொன்னபடி பேராசிரியர் பேசியுள்ளதாக அந்த நிகழ்ச்சிக்குச் சென்றவர்கள் நம்மிடம் தெரிவித்தனர். ஆனால் சீடியாக வெளியிடும் போது ஷம்சுத்தீன் காசிமி அதை மட்டும் வெட்டி விட்டு வெளியிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.


நன்றி:ஆன்லைன்பீஜே.காம்




Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP