بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: அமீரகத்தில் சங்பரிவாரின் ஊடுருவலா?


அமீரகத்தில் சங்பரிவாரின் ஊடுருவலா?

>> சனி, 22 நவம்பர், 2008

ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக சக்தி என்ற பெயரில் பண்பலை தொடங்கப்பட்டது. சமீப காலமாக அதன் செய்திகளில் கூறப்ப்டும் வார்த்தைகளில் இருந்து அதிலும் சங்பரிவாரத்தின் ஊடுருவல் இருக்குமோ? என்ற சந்தேகம் தமிழ் பேசும் மக்களிடையே எழுந்திருக்கிறது. உதாரணத்திற்க்கு தற்ப்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் மாலேகான் குண்டு வெடிப்பில் பெண் சன்னியசினி பிரக்யா சிங், இராணுவத்தில் முக்கிய பங்கு வகித்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோருடைய தொடர்பை ப்ற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை அமீரகதில் உள்ள மழையால மொழி வானொலிகளாம் ஆசியா நெட், ரேடியோ ஆசியா மற்றும் இந்தி மொழி அலவரிசை செய்திகளில் உண்மையை சொல்லி கொண்டிருக்கும் நிலையில் இதை பற்றி தமிழ் சக்தி ரேடியோ அலைவரிசை வாயை திறக்காததின் மர்மம் என்ன? ஆனால் இந்தினேசியாவில் நடந்த ஒரு குண்டு வெடிப்பை பற்றி கூறும் போது மட்டும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என குறிப்பிடுகின்றது பாரபட்சம் இல்லாமல் முக்கிய செய்திகளை தருவதுதான் செய்தி தர்மம். அதை விடுத்து மத துவேசத்தை வளர்க்கும் வகையில் அதுவும் சகோதரத்துவத்தை பேணும் தமிழ் மக்களிடயேன செய்திகளை தரும் சக்தி வானொலி தன்னை திருத்திக்கொள்ள முன் வருமா? அல்லது சகோதரத்துவத்தை விரும்பும் சகொதரர்கள் முயற்ச்சி மூலமாக தனக்கு மூடு விழா நடத்திக்கொள்ளும் சூழக்கு தன்னை தள்ளிக் கொள்ளுமா? காலம்தான் பதில் சொல்லும்

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP