بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: ரமளான் மாத நோன்பு


ரமளான் மாத நோன்பு

>> சனி, 15 ஆகஸ்ட், 2009


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ரமளான் மாத நோன்பு


இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றதுஇ அது தான் ரமளான் மாதம். இந்த மாத்தின் சிறப்பிற்கு முக்கிய காரணம் இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டது தான்..
நோன்பு நோற்பது கட்டாயக் கடமை:

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்துமுஸ்லிம்களின் மீதும் கட்டாயக்கடமையாகும். இதை 'திருக்குர்ஆன்' தெளிவாக பிரகடனம் செய்கிறது.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்கு உங்களுக்கு முன்சென்றவற்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடைமையாக்கப்பட்டுள்ளது. 

அல் குர்ஆன் 2:183

ரமளான் மாதம் எத்தகையது என்றால் அமமாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக்கூடியதும் தெளிவான சான்றுகளைக் கொண்டதும்(நன்மை தீமைகளை) வேறுபடுத்திக்காட்டக்கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். அல் குரஆன் 2:185

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடைமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 8

நோன்பின் நோக்கம்

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத்தெளிவாக கூறிவிட்டான் அந்தக்காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடைமையாக்கப்படவில்லை. நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்கு என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
''
யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903

 

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள்தனமாக நடந்துகொண்டால் 'நான் நோன்பாளி' என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.. அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி,திர்மிதி.

 

நோன்பினால் கிடைக்கும் மறுமைப்பலன்கள்:

நோன்பின் மூலம் இவவுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

'ஓவ்வொரு நன்மையான காரியத்திற்ககும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே பரிசளிப்பேன்'; என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

'நோன்பு, நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்வின் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்' என நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

இறைவனை சந்திப்பதும், பாவங்கள் மன்னிக்கப்படுவதும் எப்போது???

'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் 'என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். 

'யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்ததும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

ரமழான் மாதத்தை முடிவு செய்தல்:

ரமழான் மாதத்தை உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக தான் அடைவார்கள் என்பதால் தான் 'யார் அம்மாதத்தை அடைகிறாரோ'என்று அல்லாஹ் கூறுகிறான்.

'நீங்கள் பிறை பார்த்து நோன்பை துவங்குங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேகமுட்டம் ஏறபட்டால் ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள்' என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழி
அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி..

சென்ற ரமளானில் இருந்தவர்களில் பலர் இன்று இல்லை. எனவே வல்ல நாயன் இந்த ரமளான் மாதத்தை அடையும் பாக்கியத்தை நமக்குத் தந்து, அந்த ரமளானில் கடைப்பிடிக்கும் காரியங்களை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக! 

தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), அபுதாபி


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP