بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: பேட்டியின் இடையில் பேடியாய் ஓடிய மோடியின் வீடியோ காட்சி! தமிழ் மொழிபெயர்ப்புடன்!!


பேட்டியின் இடையில் பேடியாய் ஓடிய மோடியின் வீடியோ காட்சி! தமிழ் மொழிபெயர்ப்புடன்!!

>> சனி, 4 செப்டம்பர், 2010

ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்க சென்ற நர(பலி)எந்திர மோடி, குஜராத் பற்றிய நிருபரின் (கரன் தாப்பர்) கேள்விகளுக்கு பதில் அளிக்க திணறியதுடன், மேலும் பதில் சொல்ல முடியாமல் பேட்டியை நடுவில் விட்டுவிட்டு ஓடிவிட்டார் மோடி.

(இந்த வீடியோ 2007 லே வெளியிடப்பட்ட பழைய வீடியோ எனினும் தகவலுக்காக தமிழ் மொழிபெயர்ப்புடன் நமது இணையளத்தில் பதியப்படுகின்றது)




தமிழாக்கம்

நிருபர்: பத்திரிகைகள் உங்களை சிறந்த நிர்வாகத்திறமை உள்ளவர் என்று கூறி இருந்தும், இன்றுவரை உங்களை மக்கள் உங்கள் முகத்தில் அடித்தாற்போல் ‘படுகொலைக்காரர்’ என்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர் என்றும் கூறுகிறார்கள், உங்களுக்கு இதனால் ‘இமேஜ்’ பிரச்சினை உண்டா?

மோடி: ‘மக்கள் சொல்கிறார்கள்’ என்று சொல்லுவது சரியல்ல, இரண்டு மூன்று பேர் இதுபோல சொல்லிகொண்டு இருந்தனர். அதற்கு நான் எப்போதுமே, கடவுள் அவர்கள் மீது கருணை புரியட்டும் (God Bless them) என்றுதான் சொல்வேன்.

நிருபர்: நீங்கள் இது வெறும் இரண்டு மூன்று பேரின் சதித்திட்டம் மட்டமே என்கிறீர்களா?

மோடி: நான் அவ்வாறு சொல்லவில்லை.

நிருபர்: நீங்கள் இப்ப அப்படித்தானே சொல்றீங்க?

மோடி: இதுதான் எனக்கு தெரிந்த தகவல், இது மக்கள் குரல் அல்ல.

நிருபர்: செப்டம்பர் 2006ல், உச்ச நீதிமன்றம், குஜராத் அரசில் நம்பிக்கை இழந்ததாக கூறியதையும், ஏப்ரல் 2004ல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தங்களை ‘நவீன நீரோ’ என்றும், அப்பாவி குழந்தைகளும், பெண்களும் எரிக்கப்படும் பொது, நீங்கள் வேறு பக்கம் திரும்பிக்கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உச்ச நீதி மன்றத்திற்கே உங்கள் மீது பிரச்சினை உள்ளதே.

மோடி: கரன், தங்களிடத்தில் ஒரு கோரிக்கை, உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஏதாவது எழுத்துப்பூர்வமாக இருந்தால் அதை அறிய ஆர்வமாக உள்ளேன்.

நிருபர்: நீங்கல்சொல்வது சரிதான், எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை என்றாலும், இந்த கூற்று உங்களைப்பற்றிய உச்ச நீதிமன்றத்தின் கருத்து.

மோடி: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் ஏதாவது எழுத்துப்பூர்வமாக இருந்தால் அதைப்பற்றி பதில் அளிக்கிறேன்.

நிருபர்: உங்களுக்கு உள்ள பிரச்சினை என்ன வென்றால், ஐந்து வருடம் ஆன பிறகும் குஜராத் படுகொலையின் ஆவிகள் (இது மொழிபெயர்க்கப்பட்ட வாசம் ”ஆவி” என்பது இஸ்லாமிய கொள்கைக்கு முற்றிலும் எதிரானது) உங்களை இன்னும் பாதிக்கிறது. இதற்கு பரிகாரமாக நீங்கள் ஏன் இன்னும் ஒன்னும் செய்யவில்லை?

மோடி: (கோபமாக, கடுப்பாக) உங்களைப்போன்ற நிருபர்கள் சந்தோசப்படுவதற்க்காக.

நிருபர்: உங்களிடத்தில் ஒரு யோசனை வைக்கலாமா?

மோடி: சொல்லுங்க, அதில் பிரச்சினை இல்லை.

நிருபர்: நீங்கள் ஏன், “குஜராத் படுகொலைக்காக வருத்தப்படுகிறேன், அரசு அப்போது தேவையான நடவடிக்கைகளை செய்ய தவறி விட்டது” என்று இப்போதாவது சொல்லாக்கூடாது.

மோடி: எதைச்சொல்ல வேண்டுமோ, அதை, அப்போதே சொல்லிவிட்டேன். நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

(குஜராத் இன படுகொலைக்கு ஆதரவாக, “இது பதிலடி(“reaction”)” என்று அவர் கூறியது தங்களுக்கு நினைவிருக்கலாம்.)

நிருபர்: இப்போது சொல்லுங்களேன்?, மறுபடி சொல்லுங்களேன்.

மோடி: பழையதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

நிருபர்: நீங்கள் இப்போது சொல்ல மறுப்பது, குஜராத் மாநில மக்களின் நல்லேண்ணத்திகும், மாநிலத்தின் நலனுக்கும் எதிரானது.

மோடி: (கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, தவித்தவண்ணம், மிகவும் கோபத்துடன், கடுப்பாகி, அடக்கிக்கொண்டு,) நான் ஒய்வு எடுக்க வேண்டும், தண்ணீர்.

இவ்வாறு கூறிக்கொண்டு, பேட்டியை நிறுத்தி விட்டு, நிருபரை ‘நாம் இன்னும் நண்பர்கள், புரிந்து கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு ஓடிவிட்டார் பேடி மோடி, நர(பலி)எந்திர மோடி…

-தமிழ் மொழிபெயர்ப்பு அல்மதராசி

நன்றி- http://www.tntj.net

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP