بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: RSS-ன் கைக்கூலி என தன்னை மீண்டும் நிருபித்த அன்னா ஹசாரே


RSS-ன் கைக்கூலி என தன்னை மீண்டும் நிருபித்த அன்னா ஹசாரே

>> செவ்வாய், 27 செப்டம்பர், 2011


2008 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக ஓட்டெடுப்பு நடைபெற்றது. அரசுக்குஆதரவாக வாக்களிக்க சில எம்பிக்கள் லஞ்சம் வாங்கினர். இது இப்போது பூதாகரமாகி அமர்சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரத நாடகம் நடத்திய அன்னா ஹசாரே, போராட்டமெல்லாம் முடித்து சொந்த ஊரில்ஓய்வெடுத்தவர், திடீரென கிளம்பினார். "காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற லஞ்சம் வாங்கியவர்களை தூக்கிலிடவேண்டும் " என அதிரடியார் அறிக்கைவிட்டார். ஆனால் அமர்சிங் கைதான அதே வாரத்தில் பல ஆயிரம் கோடி சுரங்கஊழல் வழக்கில் கைதான பீஜேபியின் ரெட்டியை பற்றி வாயை கூட திறக்கவில்லை.
காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்ற எம்பிகள் வாங்கிய லஞ்சமோ சில கோடிகள். அதைவிட பல ஆயிரம் கோடி மடங்குசுரங்க ஊழலில் ஈடுபட்டு, பல்லாயிரம் கோடி ரூபாய்களை கொள்ளை அடித்த பீஜேபியின் ரெட்டியை தூக்கில் போடவேண்டும் என ஏன் அன்னா ஹசாரே சொல்லவில்லை , குறைந்த பட்சம் அவர்களுக்கு எதிராக கண்டனம் கூடதெரிவிக்கவில்லை. ஒரே வாரத்தில் ஊழலுக்கு எதிரான இரண்டு கைது சம்பவங்களில் காங்கிரஸ் ஆட்சியைகாப்பாற்றியவர்களை தூக்கிலிட வேண்டும் என கூறிவிட்டு, மற்றொறு சம்பவத்தில் ஊழல் செய்தவர் பீஜேபியைசேர்ந்தவர் என்பதால் கண்டுகொள்ளாமல் விட்டதில் இருந்தே தெரிகின்றது இவரின் சங்பரிவார முகம். ஊழல் ஊழல் எனபோலி நாடகம் ஆடிய அன்னா ஹசரே பீஜேபியின் மெகா ஊழல்களை பற்றி வாயே திறக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியை மட்டுமே குறிவைத்து குற்றம் சாட்டிய இந்த அன்னா ஹசாரே ஸ்பெக்ட்ரத்தைவிட அதிக அளவுஊழல் நடைபெற்ற பீஜேபியின் சுரங்க ஊழலை பற்றி வாயை திறக்கமாட்டேன் என்கிறார். காங்கிரஸ் கட்சி ஊழல்என்றதும் சொந்த ஊரில் ஓய்வெடுத்து கொண்டு இருந்தாலும் ஓடிவந்து தூக்கிலிட வேண்டும் என்கின்றார். கர்நாடகஉயர்நீதி மன்றமும், இந்திய உச்சநீதி மன்றமும் , பெல்லாரியில் கனிம ஏற்று மதிக்கு தடைவிதித்ருந்தும் பீஜேபியின்ரெட்டிகளின் கொள்ளை நின்ற பாடில்லை. நாட்டின் எந்த சட்ட அமைப்புகளையும் சட்டைபன்னாமல் தொடர்ந்து கனிமவளங்களை கொள்ளை அடித்துகொண்டு இருந்தனர் இந்த பீஜேபியின் ரெட்டி சகோதரர்கள். இவர்களுக்கு எதிராக ஒருசிறு கண்டனமும் தெரிவிக்கவில்லை.
சில கோடி ஊழல் செய்தவனை தூக்கில் போட வேண்டுமாம், பல்லாயிரம் கோடி ஊழலில் ஈடுப்பட்டவர்கள் பீஜேபியினர்என்பதால் அவர்களுக்கு எதிராக ஒன்றும் செய்யக்கூடாதாம். இதிலிருந்து இவர் ஊழலுக்கு எதிராக போராடவில்லை, மீண்டும் சங்பரிவார ஆட்சியை இந்தியாவில் கொண்டுவர வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டத்தைசெயல்படுத்துகின்றார்.
லோக்பால் வரம்பிற்ற்குள் பிரதமரை கொண்டுவர வேண்டும் பீஜேபியை கொண்டு வரக்கூடாது
ஏற்கனவே குஜராத் விஷயத்தில் தன்னை ஒரு சங்பரிவார ஆதவாளர் என நிறுபித்தார். ஒவ்வொறு மாநிலத்திலும் லோக்பால் போன்று ஊழலை ஒழிக்க லோக் ஆயுத்தா நியமிக்க வேண்டும் என்பது இவரின் முக்கிய கோரிக்கை, இதை ஏற்று மத்திய அரசு குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடியின் ஊழலை வெளிகொண்டுவர, 6 ஆண்டுகளால மோடியால் முடைக்கிவைக்கப்பட்டிருந்த லோக் ஆயுத்தாவிற்க்கு நீதிபதியை நியமனம் செய்தது. இதை எதிர்த்து அத்வானி தலைமையில் நாடாளுமன்றத்தில் பெரும் போராட்டம் நடத்தி நாடாளுமன்றத்தையே முடங்க செய்தனர். ஊழலை ஒழிக்க ஏற்படுத்தப்பட்ட லோக் ஆயுத்தாவை உடனே குஜதாத்தில் இருந்து நீக்க வேண்டும் என போர் கொடி உயர்த்தினர் பீஜேபியினர். ஆனால் இதை எதிர்த்து அன்னா ஹசாரே ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. இதில் இருந்து அன்னா ஹசாரே சொல்லவருவது பீஜேபியினர் எவ்வளவு ஊழல் வேண்டுமானாலும் செய்யலாம் இந்த லோக்பால், லோக் ஆயுத்தாவெல்லாம் பீஜேபிக்கு கிடையாது. ஆக லோக்பால் வரம்பிற்க்குள் பிரதமர் இருக்க வேண்டும் ஆனால் பீஜேபி இருக்க கூடாது இதுதான் அன்னா ஹசாரே நிலைபாடு. குஜராத் விஷயத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆதரவு போக்கை காட்டியவர் இப்போது கார்நாடகா பீஜேபியின் ரெட்டி விஷயத்திலும் தான் சங்பரிவாரா கைகூலி என்பதை மீண்டும் நிறுபித்துள்ளார். அன்னா ஹசாரே போன்ற ஆர்.எஸ்.எஸ் கைகூலிகளின் உண்மை முகத்தை அறிந்து சங்பரிவார சதிதிட்டத்தைமுறியடிக்க வேண்டும்
S.சித்தீக்.M.Tech

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP