بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து


சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

>> செவ்வாய், 15 செப்டம்பர், 2009

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது, குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரிய வர்கள் (சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான். அப்படியானால் ஒரு சுவடி இவர்களது வரலாற்றுடன் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப் பட்டிருக்காது. அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.
அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே
''அந்த ஏட்டுக் குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் 'அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அது என்ன சுவடி? அது என்ன ஏடு என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.
'சாவுக்கடல் சாசனச் சுருள்கள்'' என்ற தலைப்பில் 1998ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. தொலைக் காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993ஆம் ஆண்டிலேயே காட்டப் பட்டதாகவும் சொல்லப்பட்டது. (அந்த வீடியோ பதிவுகளை காண இங்கே கிளிக் செய்யவும்)
Playl - Download
Playl - Download

Playl - Download
Playl - Download
அதன் விபரங்கள்:
1947ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப்படுகிறது.
ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறு நாள் தந்தையும், மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியின் கீழிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள் களையும் அந்த செருப்புத் தொழிலாளி யிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார். கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப் பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.
அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், 'அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும்'' என்று விண்ணப்பித்தார்.
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், 'அது தனியார் சொத்து'' என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர் களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த குகைகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.
1952ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் Manuscripts(கையெழுத்துப் பிரதிகள்) இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டு உள்ளனர்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.
பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்ட போதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.
இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை Micro film (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.
அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்குப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.
இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.
அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 Manuscripts (கையெழுத்துப் பிரதி) களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
மேற்கத்திய மக்களின் மத நம்பிக் கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படு வார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலி ருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப் படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெற வில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கை கோட்பாடு களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் பவுல்' என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.
மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய் யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலை முறையில் வாழ்ந்த உண்மையாளர் களின் வாழ்வில் காண முடியவில்லை.
மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்கையில்,'It Confirms Islam'' அது இஸ்லாத்தை உறுதிப்படுத்து கிறது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப் பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.
இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞரும் பேசும் போது, 'It Confirms Islam'அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகிறார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.
ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எந்த வகையில் குர்ஆனையும், இஸ்லாத்தையும் உண்மைப்படுத்து கின்றன என அவர்கள் கூறுகிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.
'ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்'' என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க: மத்தேயு 4:23, மாற்கு 1:14)
எந்த இறை வேதத்தை மறைத்தார் களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.
'குர்ஆனை ஒத்திருக்கின்றது'' என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக் குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

Read more...

ஜின்னா-என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த்?

>> புதன், 19 ஆகஸ்ட், 2009

சிம்லா: இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது என்று பாஜகவலிருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.

நேற்று சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்' நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய பகுதிகள்...

ஜின்னா சுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும் போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை.

அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில் வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும் அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது. காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை விரும்பாதவர்கள்.

ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி அல்ல. அவர் ஒரு திவானின் மகன்.

அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா.

அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர் தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான முயற்சிகளே.

மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார்.

ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன்.

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது.

1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம் தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை. காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல் பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில் இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும் போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார்.

முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார். இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது.. ஆனால் இது சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு பிளவுபடக் காரணமானது.

நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.

முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை. இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும் இருந்தார்.

இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார். இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது என்பதைக் கூறுகிறேன்.

எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே.

மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை. முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க முடியும் என அவர் நினைத்தார்.

அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர் விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார். அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.

இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''. அங்கேயே பிரிவினை வந்து விட்டது.

ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக பார்ப்பதை அவர் விரும்பாதவர்.

ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர். ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர். ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார். ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே இருந்தது.

ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக இருந்தவர்.

இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன். அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன. அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்கள் என்றே கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?.

இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம உரிமையோடு வாழ அனுமதி வேண்டும். அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது. முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.

அன்று அனுமன்.. இன்று ராவணணா?:

இந் நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சிம்லாவில் இன்று நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு புத்தகம் எழுதியதற்காக நீக்கியுள்ளார்கள். உண்மையில் என் புத்தகத்தை பாஜத தலைவர்கள் படித்துக் கூட பார்க்கவில்லை.

என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜ்நாத் சிங் தொலைபேசியில் கூறினார். இதை அத்வானியும் ராஜ்நாத் சிங்கும் டெல்லியிலேயே நேரில் சொல்லியிருக்கலாம்.

சிம்லா கூட்டத்துக்கு வரச் சொலிவிட்டு, இங்கு வைத்து கட்சியை விட்டு நீ்க்குவதாக போனில் சொன்னது தான் வருத்தம்.

நான் இதுவரை பாஜகவின் அனுமனாக இருந்தேன். இப்போது என்னை பாஜக ராவணனாக கருதுகிறது.

நான் ராணுவத்திலிருந்து மக்கள் சேவைக்கு வந்தவன். நான் பென்ஷன் வாங்கும் ஆசாமியும் அல்ல. 30 வருடமாக பாஜகவில் அரசியலில் இருந்தேன். அதன் ஆரம்பகால உறுப்பினர் தான். கட்சியின் தலைவராகவும் இருந்துள்ளேன். அது இப்படி முடிவுக்கு வரும் என்று நினைத்ததில்லை.

என் புத்தகத்தை வைத்து காங்கிரஸ் பிரச்சனை செய்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். காரணம் நாடு பிளவுபட காரணம் என்று நான் காங்கிரஸ் தலைவர்களைத் தான் அதில் விமர்சித்துள்ளேன். ஆனால், பாஜக பிரச்சனை செய்தால் என்ன செய்வது?. எல்லாவற்றையும் அரசியலாக்குவது தவறு. குறிப்பாக ஒருவரின் சிந்தனைகளுக்கு தடை போடுவது பெரும் தவறு.

ஜின்னா குறித்தும், நாடு பிளவுபட்ட அந்த வலி மிகுந்த நாட்களையும் தான் நான் புத்தகமாக்கினேன். அந்தப் புத்தகம் 5 வருட கடும் உழைப்பில் உருவானது. புத்தகம் எழுதியதற்காக நான் வருதப்படவில்லை. அதை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.

அத்வானி எதிர்க் கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இளைய தலைமுறையிடம் பொறுப்பைத் தருமாறு பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை தந்துள்ளது குறித்து கேட்கிறீர்கள். அது குறித்து நான் ஏதும் கூற விரும்பவில்லை. நான் ஆரஎஸ்எஸ்சில் எந்தக் காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களது கருத்துக்களுக்கு நான் எப்படி பதில் சொல்வது என்ற ஜஸ்வந்த் சங் பரிவார் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நன்றி: தட்ஸ்தமிழ்.காம்


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.

Read more...

ரமளானில் தினமும் இரவு நடைபெறும் பயானை இங்கு நெரடியாக காணலாம்

>> திங்கள், 17 ஆகஸ்ட், 2009

Broadcasting Live with Ustream.TV



 S.S.Bahurudeen


Love Cricket? Check out live scores, photos, video highlights and more. Click here.

Read more...

ரமளான் மாத நோன்பு

>> சனி, 15 ஆகஸ்ட், 2009


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

ரமளான் மாத நோன்பு


இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நம்மிடம் ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம் வரவிருக்கின்றதுஇ அது தான் ரமளான் மாதம். இந்த மாத்தின் சிறப்பிற்கு முக்கிய காரணம் இந்த மாதத்தில் மனித குலத்தின் நேர்வழியான திருக்குர்ஆன் அருளப்பட்டது தான்..
நோன்பு நோற்பது கட்டாயக் கடமை:

புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்துமுஸ்லிம்களின் மீதும் கட்டாயக்கடமையாகும். இதை 'திருக்குர்ஆன்' தெளிவாக பிரகடனம் செய்கிறது.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்கு உங்களுக்கு முன்சென்றவற்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடைமையாக்கப்பட்டுள்ளது. 

அல் குர்ஆன் 2:183

ரமளான் மாதம் எத்தகையது என்றால் அமமாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக்கூடியதும் தெளிவான சான்றுகளைக் கொண்டதும்(நன்மை தீமைகளை) வேறுபடுத்திக்காட்டக்கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். அல் குரஆன் 2:185

 நபிகள் நாயகம்(ஸல்) அவர்களது சமுதாயத்தின் மீது மட்டுமின்றி அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களுக்கும் நோன்பு கடைமையாக்கப்பட்டிருந்ததை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது. அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 8

நோன்பின் நோக்கம்

நோன்பு கடமையாக்கப்பட்டதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே மிகத்தெளிவாக கூறிவிட்டான் அந்தக்காரணம் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் நோன்பு கடைமையாக்கப்படவில்லை. நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்கு என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
''
யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1903

 

உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது யாரேனும் முட்டாள்தனமாக நடந்துகொண்டால் 'நான் நோன்பாளி' என்று கூறிவிடுங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்.. அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி,திர்மிதி.

 

நோன்பினால் கிடைக்கும் மறுமைப்பலன்கள்:

நோன்பின் மூலம் இவவுலகில் நாம் பயிற்சி எடுக்கிறோம். இதனால் நமக்கு அல்லாஹ்விடம் என்ன கிடைக்கும்?

'ஓவ்வொரு நன்மையான காரியத்திற்ககும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே பரிசளிப்பேன்'; என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

'நோன்பு, நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்வின் கஸ்தூரியை விடச் சிறந்ததாகும்' என நபிகள் நாயகம்(ஸல்) கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

இறைவனை சந்திப்பதும், பாவங்கள் மன்னிக்கப்படுவதும் எப்போது???

'நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் 'என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள். 

'யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்ததும் நோன்பு நோற்கிறாரோ அவர் அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள் '  அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி

ரமழான் மாதத்தை முடிவு செய்தல்:

ரமழான் மாதத்தை உலக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அடைய மாட்டார்கள். ஒருவர் பின் ஒருவராக தான் அடைவார்கள் என்பதால் தான் 'யார் அம்மாதத்தை அடைகிறாரோ'என்று அல்லாஹ் கூறுகிறான்.

'நீங்கள் பிறை பார்த்து நோன்பை துவங்குங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேகமுட்டம் ஏறபட்டால் ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள்' என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பொன்மொழி
அறிவிப்பாளர்: அபுஹுரைரா(ரலி), புகாரி..

சென்ற ரமளானில் இருந்தவர்களில் பலர் இன்று இல்லை. எனவே வல்ல நாயன் இந்த ரமளான் மாதத்தை அடையும் பாக்கியத்தை நமக்குத் தந்து, அந்த ரமளானில் கடைப்பிடிக்கும் காரியங்களை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கக் கூடியவர்களாக நம்மை ஆக்கி வைப்பானாக! 

தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), அபுதாபி


See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.

Read more...

பள்ளிகளில் பாலியல் கல்வி - ஒரு கண்ணோட்டம்!



பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருங்கே கிளம்பியுள்ளது. இதை எதிர்க்கும் குஜராத், மத்தியப் பிரதேசம், மகாரஷ்டிரம், கர்நாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள், "பாலியல் கல்விக்கான பாடத்திட்டம் இந்திய குழந்தைகளுக்கு ஏற்றவகையில் இல்லை" என்றன. கேரளா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதோடு பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கமிட்டியையும் அமைத்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் செளஹான், மத்தியக் கல்வி அமைச்சகத்திற்கு எழுதியக் கடிதத்தில், "இந்தியக் கலாச்சாரத்தையும் அதன் உன்னதத்தையும் அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ளது; மாணாக்கர்களுக்கு பாலியல் கல்வியைப் போதிப்பதைவிட யோகா மற்றும் இந்தியக் கலாச்சாரத்தைப் போதிப்பதே அவசியம்" என்றுக் கூறியுள்ளார்.


ராஜஸ்தான் கல்வி அமைச்சர் கன்ஷியாம் திவாரி, "பள்ளி மாணாக்கர்களின் மனங்களைக் கெடுக்கத் தகுதியானவையாக பாலியல் பாடத்திட்டம் இருப்பதாகக்" கூறினார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியிடம், "பாலியல் கல்வியை ஏன் எதிர்க்கிறீர்கள்?" என்று பத்திரிகையாளார்கள் கேட்டபோது, "மேற்கத்திய நாடுகளுக்கு வேண்டுமானால் பாலியல் கல்வி அவசியப்படலாம். பரந்த கலாச்சாரப் பின்னணி கொண்ட இந்தியாவிற்கு இது அவசியமில்லை. இது நமது குழந்தைகளிடம் எதிர்மறை எண்ணங்களையே தோற்றுவிக்கும்" என்றார்.

இவர்கள் மட்டுமல்லாது பாலியல் கல்வியைப் பள்ளிகளில் போதிப்பதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்புக்குரல் ஒலிக்கின்றது. மத அடிப்படைவாதிகள் எதிர்க்கும் பெரும்பாலான விசயங்கள் மதக்கோட்டிற்கு எதிராக இருப்பதே காரணமாகச் சொல்லப்படும். ஆனால், பாலியல் கல்வி இஸ்லாமியக் கோட்பட்டிற்கு எதிரானதன்று!

பால்வினை நோய்கள், போதைப்பழக்கம், பலாத்காரம், பணியிட/படிப்பிடச் சீண்டல்கள் ஆகியவற்றிலிருந்து விழிப்படைவதற்காகப் பள்ளிப் பருவத்திலேயே பாலியல் கல்வி அவசியம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இது எத்தனை சதவீதம் சாத்தியமாகும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. சில விஷயங்களில் அரசாங்கத்தின் தவறான அணுகுமுறை எதிர்மறை விளைவுகளைத்தான் தோற்றுவித்துள்ளன.

உதாரணத்திற்கு எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கத்தை எடுத்துக் கொள்ளலாம். எயிட்ஸ் விழிப்புணர்வு இயக்கம் மக்களிடையே எயிட்ஸ் எனும் உயிர்க்கொல்லி நோய் பரவாமல் தடுக்கும் நல்ல நோக்கத்தில் தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்த இயக்கம் எயிட்ஸை ஒழிப்பதற்கு இறுதியாகச் சொல்லியத் தீர்வு, அது துவங்கப்பட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்ய உதவியதோ இல்லையோ, மக்களிடையே விபச்சாரம் பல்கிப்பெருக இவ்விழிப்புணர்வு இயக்கம் நன்றாகத் துணை புரிந்தது.

ஐதராபாத்தில் நடந்த செக்ஸ் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாநாட்டில், பேராசிரியர்கள் சஞ்சய் சதுர்வேதி, விஜய் குரோவர் ஆகியோர் பேசும் பொழுது, "பாதுகாப்பற்றச் செக்ஸ் உறவுகளால், நகர மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர்; எய்ட்ஸ் நோய்க்கு ஆட்பட்டுள்ளனர் என்று ஏகப்பட்டத் தகவல்கள் வந்து விட்டன. 'மாணவ, மாணவிகளிடமும் பாதுகாப்பற்றச் செக்ஸ் பழக்கம் ஆரம்பித்துவிட்டது' என்பதை எங்கள் சர்வே எடுத்துக் காட்டுகிறது. இதைத் தடுக்க வேண்டியது நம் கடமை" என்று பேசியுள்ளனர்.

ஒட்டுமொத்த எயிட்ஸ் ஒழிப்பு/விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் பாலியல் எண்ணத்தைத் தூண்டும் காரணி/சூழல் களைத் தடுக்க வேண்டும் என்று எவரும் மறந்தும் சொல்லவில்லை . அவர்களின் பரிந்துரை எல்லாம், "பாதுகாப்பான உறவு தான் எயிட்ஸைத் தடுக்கும்" என்பதாகவே இருக்கிறது. ஏனென்றால் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்கு வாரிவழங்கும் முதலாளிகள் தான் மேற்கண்டப் பாலியல் எண்ணங்களைத் தூண்டும் காரணிகளையும் பரப்புகின்றனர். அதாவது தொட்டிலையும் ஆட்டி விட்டு, குழந்தையையும் கிள்ளிவிடுதல் அரசாங்க அனுமதியுடன் நடைபெறுகிறது.

எயிட்ஸைத் தடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட எயிட்ஸ் விழிப்பு/ஒழிப்பு இயக்கங்கள் எவ்வாறு விபச்சாரம் பெருகத் துணை புரிந்தனவோ, அது போன்றே ஆண், பெண் இணைந்து படிக்கும் பள்ளிக்கூடங்களில் நடத்தப்படப் போகும் பாலியல் கல்வியும் மாணவ, மாணவிகளிடையே பண்பாடற்றப் பழக்க வழக்கங்களை உருவாக்கும் விதத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தவே அதிகம் வாய்ப்புள்ளது.

பாலியல் கல்வி நடைமுறையிலுள்ள மேற்கத்திய நாடுகளின் அனுபவங்களும் அவை தரும் அறிக்கைகளும் அதிர்ச்சியடைய வைக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனில் தான் இளம்பிராயக் கருக்கலைப்புகள் அதிகம்(ஆதாரம்: http://www.unicef.org.uk/youthvoice/sexeducation.asp). இங்கு பள்ளிக்கூடங்களில் பாலியல் கல்வி கடந்த முப்பது வருடங்களாக நடைமுறையில் உள்ளது என்பது கவனிக்கத் தக்கது! வரைமுறைகளற்ற உறவுகளை முன்னிலைப்படுத்தி கூட்டுக்குடும்ப அமைப்பைப் புறக்கணித்தன் விளைவு இது.

குடும்பமுறை அமைப்புகள் சிதையாமலிருக்கும் இந்தியாவில் இதற்கான வாய்ப்புகள் அறவே இல்லாமல் இருந்த நிலை எண்ணிப்பார்க்கப்பட வேண்டியதாகும். ஆனால், மேற்கத்திய மோகத்தில் தங்களைப் பலிகொடுக்கும் சில பெரிய பணக்காரக் குடும்பங்களில் இத்தகையச் சீரழிவு நிலை இருப்பதையும் மறுக்க இயலாது.

சமீபத்தில், தில்லியைச் சேர்ந்த, மருத்துவ அறிவியற் பல்கலைக்கழகக் கல்லூரி (University College of Medical Sciences) ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. தெற்கு தில்லியிலுள்ள இரண்டு கல்லூரிகள், மூன்று பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் நடத்திய சர்வேயில், "சக மாணவியுடன் உறவு வைத்துள்ளேன் " என்று 10% மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த 10% மாணவர்களுள், 57% பேர், "ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு வைத்துள்ளோம்" என்றும், "அப்போது மது, போதையும் ஏற்றிக்கொள்வோம்" என்றும் மிகச் சாதாரணமாகக் கூறியுள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பில் மாணவர்கள்தான் அதிகம் பங்கேற்றனர். 13 வயதுக்குள் செக்ஸ் உறவு வைத்துக் கன்னித்தன்மையை 13% மாணவர்கள் இழந்துள்ளனர். அதுபோல, மாணவிகளில் 6% பேர் கன்னித் தன்மையை 13 வயதுக்குள் இழந்துள்ளனர். பலருடன் உறவு வைத்துள்ள மாணவர்களில் 54% பேர், "எப்போதாவது ஆணுறை பயன்படுத்துவதாகக்" கூறியுள்ளனர். 75% பேர், "ஆணுறை பயன்படுத்தியதே இல்லை" என்றனர். இவ்வாறு இந்தக் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

வயது 13 ஆவதற்கு முன்பேயே, 'உறவு' வைத்துள்ளனர் 25% மாணவர்கள். ஒருவருடன் மட்டுமில்லை, நான்கைந்து மாணவர்களுடன் உறவு வைத்துள்ளனர் 57% மாணவ, மாணவிகள். இவர்களில் 75% பேர், உறவின் போது ஆணுறை பயன்படுத்தியதே இல்லை. "உறவு கொள்ளும் முன் மது, போதை சாப்பிடுவது வழக்கம்" என்று சொல்கின்றனர் 30% பேர். இந்தப் பகீர் தகவல்கள் எல்லாம், ஏதோ வெளிநாட்டு சமாச்சாரங்கள் என்று நினைத்தால் தவறு; இந்தியத் தலைநகர் தில்லியில்தான் இவை அனைத்தும் நடந்தேறுகின்றன .

இந்தக்கல்வி நிறுவனங்களில் பணக்கார மாணவ, மாணவிகள்தான் படிக்கின்றனர் என்பது கவனிக்க வேண்டியதாகும். 14 வயது முதல் 19 வயது வரை உள்ள 550 மாணவ, மாணவிகளிடம் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. கூச்சம் சிறிதுமின்றிப் பதில் அளித்த இவர்கள், "உறவு வைப்பதில் தவறு என்ன இருக்கிறது?" என்றும் கேட்டது தான் இன்னும் வேதனையான விஷயம்.

இவ்வளவு அப்பட்டமாக எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி மாணவர்கள் இருப்பதற்கான காரணம் ஏற்கெனவே அரசு அனுமதி அளித்து நடந்து வரும் எயிட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், ஒளிவு மறைவற்ற உணர்ச்சிகளைத் தூண்டும் படியிலான சூழல்களும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது, இனி பள்ளிகளிலேயே அதனைக் குறித்தப்பாடங்களை விளக்கிக் கொடுக்கப்படும் சூழல் வரும் பொழுது ஏற்படும் பின்விளைவுகளை/எதிர்மறை விளைவுகளை நினைத்துப் பார்க்க முடியவில்லை.

இதில், இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பாலியல் கல்வியின் தேவைபற்றி மாணக்கர்களிடமே கருத்துக் கேட்கிறார்கள். LKG வகுப்பு மாணவனிடம் SSLC பாடம் பற்றி கருத்துக் கேட்பது எப்படி அபத்தமோ அதுபோல்தான் தங்களுக்குப் போதிய அனுபவமும் அறிவும் இல்லாத விசயத்தில் கருத்துக் கேட்பதும் அபத்தமே! பள்ளிகளில் பாலியல் கல்வியைப் போதிப்பதை விட பெற்றோருக்குப் போதித்துப் பிள்ளைகளுக்கு உரிய வயதில் எடுத்துச் சொல்லும் பொறுப்பை அவர்களிடம் சுமத்தலாம்.


மாணாக்கர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்தியாவில் எயிட்ஸ் பரவக் காரணம் என்பது பழியை மாணாக்கர்கள் மீது போடும் பொறுப்பற்றப் பேச்சாகும்!

சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, இந்தியாவில் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிகை ஐந்தரை கோடிக்கும் அதிகம். 15-29 வயதுக்குட்பட்டவர்கள் மட்டும் 50% க்கும் அதிகம். இதற்கெல்லாம் காரணம் மாணவர்கள் மட்டுமா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 1980 ஆம் ஆண்டிலிருந்தே பாலியல் கல்வி, தேசியக் கல்வித் திட்டத்தில் இருந்து வருகிறது. அதில், கரு உண்டாகாமல் தடுக்கும் பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் பால்வினை நோய்கள் பற்றி மட்டுமே போதிக்கப் பட்டன. இதன் காரணமாக இளையத் தலைமுறையினரிடம் குற்றமற்ற உடலுறவு மனப்பான்மை அதிகரித்தது.

2006 ஆம் ஆண்டு இந்தியா டுடேயின் கருத்துக்கணிப்பின்படி 8% இளைய தலைமுறையினரிடம் இத்தகைய முறையற்ற உறவு /பழக்கம் உள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தியாவின் 11 நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி , 18-30 வயதிற்குட்பட்ட பெண்களில் நால்வரில் ஒருவர் திருமணத்திற்கு முன்பு இத்தகைய முறையற்ற உறவு வைத்துள்ளதாகத் தெரிவித்தனர்! (இதைத் தொடர்ந்துதான் நடிகை குஷ்புவின் பேட்டி சர்ச்சைக்குள்ளானது !)

இதில் குறைந்த பட்சம் பாலியல் ஐயங்களை மகனுக்குத் தந்தையும், மகளுக்குத் தாயும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றாவது சொல்கிறார்களா என்றால் அதுவுமில்லை. மாணாக்கர்களுக்குத் தங்கள் தாய்-தந்தையை விட, ஆசிரியர்களிடமே மனம் விட்டுக் கேட்டறிந்து தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமாம்! MTV, Fashion TV க்களை குடும்பத்துடன் வெட்கமின்றி பார்த்து ரசிக்கும் இவர்கள் இதைச் சொல்லலாமா?.

குடும்ப உறவுகளைச் சீர்குலைக்கும் தொலைக்காட்சி சீரியல்களையும் ஆணும் பெண்ணும் அரை நிர்வாண உடைகளுடன் கட்டிப்புரளும் சினிமாக்களையும் வெட்கமின்றிக் குடும்பத்துடன் பார்க்க முடிபவர்களால், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு உதவும் பாலியல் ஐயங்களைத் தெளிவுபடுத்துவதில் வெட்கப்பட என்ன உள்ளது என்று தெரியவில்லை.


ஆக்கம்: நல்லடியார்.
நன்றி:சத்தியமார்க்கம்.காம்



See the Web's breaking stories, chosen by people like you. Check out Yahoo! Buzz.

Read more...

சரித்திரப் பார்வையில் மூடர்கள் தினம்! (April Fool)

>> வியாழன், 26 மார்ச், 2009

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النّ

"இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!"

சரித்திரப் பார்வையில் மூடர் தினம்! (April Fool)

இறைவனின் நேரிய வழிகாட்டுதல்களும், அறிவுப்பூர்வமான எந்த வித கொள்கைளும் இல்லாமல் தம்முடைய மனோஇச்சைகளையே தங்களின் கொள்கைகளாகவும் வாழ்க்கை நெறியாகவும், கடவுளாகவும் பின்பற்றி வாழக்கூடியவர்களின் கண்டுபிடிப்புகளில் ஒன்று தான் குறிப்பிட்ட தினங்களை முக்கியப்படுத்தி அவைகளுக்கு முக்கியத்துவம் தந்து அந்த நாட்களை கொண்டாடுவது ஆகும்.

இவ்வகையான கொண்டாட்டங்களில் காதலர் தினம், மனைவியர் தினம், அன்னையர் தினம், மூடர் தினம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான தினங்களைக் கொண்டாடுவோர் அவற்றுக்காக ஒரு குறிப்பிட்ட காரணத்தையும் கூறுவர். இந்த சிறிய கட்டுரையில் இவர்கள் மூடர் தினம் (ஏப்ரல் ஃபூல்) என கொண்டாடும் தினத்தைப் பற்றிய ஒரு சிறிய கண்ணோட்டத்தைப் பார்க்கலாம்.

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த கருத்துக்கள்: -

மூடர் தினத்தின் தோற்றம் குறித்த பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றது. இருப்பினும் இதன் தோற்றம் குறித்த உறுதியான கருத்து என்று எதுவும் கூறுவதற்கில்லை.

இதன் தோற்றம் குறித்த கருத்துக்களில் மிகவும் பிரபலமாகக் கருதப்படும் சிலவற்றைக் காண்போம்: -

1) பண்டைய அறியாமைக் கால பழக்கம்: -

சிலரது கூற்றுப்படி, பண்டைய காலத்தில் வாழ்ந்த அறியாமைக் கால மக்கள் ஏப்ரல் 1 அல்லது மார்ச் 21 ஆம் தேதியை மையமாக வைத்து வரக்கூடிய 'சம இரவு தினம்' (vernal equinox) என்றழைக்கடும் (பூமியின் வடக்கு அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் துவக்க தினத்தை திருவிழா தினமாக கொண்டாடி வந்தனர். இந்த தினத்தில் கேலியும் கிண்டல்களும் அடங்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தனர்.(1)

2) புதிய வருடப்பிறப்பு அறிமுகமாதல்:-

கி.பி. 1582 ஆம் ஆண்டு கிறிஸ்தவ போப் கிரிகோரி XIII என்பவர் புதிய காலன்டரை அறிமுகப்படுத்தி ஜனவரி 1 ஆம் தேதியை புதிய ஆண்டின் துவக்க நாளாக மாற்றியபோது அதுவரை ஜூலியன் காலன்டர் முறைப்படி ஏப்ரல் ஒன்றாம் தேதியை தங்களின் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்தவர்கள் இந்த புதிய காலன்டரை ஏற்க மறுத்தனர். அவர்களை கேலி செய்யும் விதமாக இந்த புதிய காலன்டரை தினித்தவர்கள் ஜனவரி முதல் தேதியை வருடப்பிறப்பாக ஏற்க மறுத்தவர்களை கேலியும், கிண்டலும் செய்யும் விதத்தில் அவர்களை மூடர்களாக்குகின்ற விதத்தில் பொய்களையும் போலியான பரிசுப் பொருட்களையும் அனுப்பி வைத்து மகிழ்ந்தனர். இந்த அறிவீனமான செயல் பின்னர் படிப்படியாக ஐரோப்பியா முழுவதும் பரவலாயிற்று. (2)

3) முஸ்லிம்களிடமிருந்து ஸபெயினைக் கைப்பற்றுதல்: -

ஸபெயினை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது அவர்களின் படை மிகவும் வலிமை மிக்கதாகவும் எதிரிகள் கண்டு அஞ்சக் கூடியதாகவும் அமைந்திருந்தது. அதைக் கண்டு பொறுக்காத இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை அழித்துவிட துடித்தனர். இருப்பினும் அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதற்கான காரணத்தை அவர்கள் ஆராயும் போது முஸ்லிம் படையினர் சிறந்த ஈமான் தாரிகளாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருப்பதைக் கண்டனர்.

முஸ்லிம்களை வெல்ல வேண்டுமானால் அவர்களின் நம்பிக்கையைக் சிதைப்பதை விட வேறு வழியில்லை என்பதை உணர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஸ்பெயினில் உள்ள முஸ்லிம்களுக்கு மதுபானத்தையும் சுருட்டுகளையும் இலவசமாக அனுப்பி வைத்தனர். அதைப் பயன்படுத்த துவங்கிய முஸ்லிம்கள் நாளடைவில் தங்களது ஈமானில் உறுதியழந்து பின்னர் படிப்பபடியாக தங்களின் வலிமையிலும் வலுவிழந்தனர்.

இதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசம் இருந்த ஸ்பெயினின் பகுதிகளைக் கைப்பற்றலாயினர். இறுதியில் முஸ்லிம்களின் கோட்டையாக விளங்கிய கிரினாடாவில் உள்ள பகுதியை ஏப்ரல் முதல் தினத்தன்று கைப்பற்றினர். அந்த நாள் முதல் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல் தேதியை மூடர்களின் தினமாக அவர்கள் கொண்டாடி வருகின்றனர். (3)

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் தினம்!: -

இந்த வகை மூடர் தினத்தின் தோற்றம் குறித்து கூறப்படும் கருத்துக்களில் உண்மையானது எதுவாக இருந்தாலும் முஸ்லிம்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதோ அல்லது அந்த தினத்தில் ஒருவரையொருவர் கேலியும், கிண்டலும் செய்து பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதோ இஸ்லாத்தில் அனுமதிக்கபடாதவைகளாகும்.

மூடர் தினத்தை முஸ்லிம்கள் ஏன் கொண்டாடக் கூடாது?

1) ஜாஹிலிய்யாக் (அறியாமைக்) காலத்தின் அனைத்து மூடப்பழக்க வழக்கங்களையும் குழிதோண்டிப் புதைப்பதற்காக வந்தவர்கள் தான் நமது நபி (ஸல்) அவர்கள். நாம் அண்ணலாரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டுமேயல்லாது அறியாமைக்கால மக்களின் பழக்கங்களாகிய பிறரைக் கேலி, கிண்டல் செய்து அவர்களை ஏமாற்றி அதன் மூலம் சந்தோசமடைவதைப் பின்பற்றக் கூடாது.

2) கிறிஸ்தவ பாதிரியாரான போப் கிரிகோரி என்பவர் துவக்கிய புதிய காலன்டரைப் பின்பற்றாதவர்களை கேலி செய்வதற்காக உருவாக்கியதாகக் கருதப்படும் இந்த தினத்தைக் கொண்டாடுபவர்கள் அவர்களின் இத்தீய செயல்களுக்குத் துணைபோவதோடு அல்லாமல் நபி (ஸல்) அவர்களின் 'யார் அந்நிய சமூகத்தவர்களுக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!' என்ற எச்சரிக்கையை மீறி செயல்பட்டவரைப் போலாவார்.

3) போதைப் பொருட்களுக்கு முஸ்லிம்களை அடிமையாக்கி அதன் மூலம் அவர்களை மூடர்களாக்கி அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்து அதன் மூலம் தந்திரமாக ஸ்பெயின் நாட்டை முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றி அதைக் கொண்டாடுபவர்களோடு சேர்ந்து ஒரு முஸ்லிமும் கொண்டாடுவாரானால் அவரை விட வேறு ஒரு மூடர் இருக்க முடியுமா? ஏனென்றால் இது தம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் மூடர்களாக்கப்பட்டதை தாமே கொண்டாடுவது போலாகாதா?

4) இந்த மூடர் தினத்தித்தின் தோற்றம் குறித்த மேலே குறிப்பிடப்பட்ட காரணங்கள் எதுவாக இருந்தாலும் அல்லது இவைகளல்லாத வேறு எந்தக் காரணமாக இருந்தாலும் அவைகள் அனைத்துமே முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக இஸ்லாத்தை அழிக்கத் துடிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்டது. எனவே தம்மை முஸ்லிம் எனக் கூறிக்கொள்ளும் எவரும் இத்தகைய தீய செயல்களிலிருந்து விலகியிருப்பதோடல்லாமல் மற்றவர்களுக்கு இதன் தீமைகளை எடுத்துக் கூற முன்வரவேண்டும்

5) இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தினங்களைக் கொண்டாடுபவர்கள் செய்யும் காரியங்களாவன: -

a. பொய்யான தகவல்களைப் பரிமாறிக்கொள்வது

b. பிறரை ஏமாற்றி அவர் ஏமாந்து துன்பப்படும் போது அதைப் பார்த்து ரசிப்பது

c. போலியான பரிசுப்பொருட்களை பிறருக்கு அனுப்பி அவரை கேலி செய்வது
d. ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் (தாய், தந்தை அல்லது மனைவி போன்றவர்கள்) இறந்து விட்டதாக வதந்தியைக் கிளப்பி விட்டு அவரை வேதனைப் படுத்தி அதை ரசிப்பது

e. ஒரு நாட்டின் தலைவர் இறந்து விட்டதாக அல்லது மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டு விட்தாக வதந்நியைக் கிளப்புவது

f. இது போன்ற ஏராளமான பொய்யான தகவல்களையும் கேவலத்திற்குரிய செயல்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இவைகள் அனைத்துமே இஸ்லாத்தில் தடுக்கப்பட்டவைகள் மடடுமின்றி இதைச் செய்பவர்களுக்கு மிக கடுமையான எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கின்றது.

பொய் பேசுவதன் தீமைகள்: -

1) பொய்யுரைப்பவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நம்பாதவர்கள்: -

அல்லாஹ் கூறுகிறான் :

16:105 நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (அல்குர்ஆன் 16:105)

2) முனாஃபிக்கின் (நயவஞ்சகனின்) அடையாளங்களில் ஒன்று பொய்யுரைப்பது: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும்.. (அவையாவன:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; அவனிடம் நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான். அறிவிப்பவர் : அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம் : புகாரி.

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.. (அல்குர்ஆன் 9:77)

3) பொய் பேசுவது நரகத்திற்கு வழிவகுக்கும்: -

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும்; நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆகி விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி), ஆதாரம்: புகாரி

4) பரிகசிப்பது மற்றும் கேலி செய்வது அறிவீனர்களின் செயல்: -

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) மூஸா தம் சமூகத்தாரிடம், 'நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று சொன்னபோது, அவர்கள் '(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?' என்று கூறினர்; (அப்பொழுது) அவர், '(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று கூறினார். (அல்குர்ஆன் 2:67)

5) பொய் பேசுபவனுக்குரிய தண்டனைகள்: -

சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெரும்பாலும் தம் தோழர்களிடம் 'உங்களில் யாரும் (இன்றிரவு) கனவு கண்டீர்களா?' என்று கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், அல்லாஹ் யாரை நாடினானோ அவர் (தாம் கண்ட கனவை) அல்லாஹ்வின் தூதரிடம் எடுத்துரைப்பார். (அதற்கு அல்லாஹ்வின் தூதரும் விளக்கமளிப்பார்கள். ஒரு(நாள்) அதிகாலை நேரம் (ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின்) நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:

இன்றிரவு (கனவில்) இரண்டு (வான)வர் என்னிடம் வந்து என்னை எழுப்பி, 'நடங்கள்' என்றனர். நான் அவர்கள் இருவருடன் நடக்கலானேன். நாங்கள் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்த ஒரு மனிதரிடம் சென்றோம். அங்கு அவரின் தலைமாட்டில் இரும்பாலான கொக்கியுடன் ஒருவர் நின்றிருந்தார்.. அவர் (படுத்திருந்தவருடைய) முகத்தின் ஒருபக்கமாகச் சென்று கொக்கியால் அவரின் முகவாயைப் பிடரி வரை கிழித்தார்; (அவ்வாறே) அவரின் மூக்குத் துவராத்தையும் கண்ணையும் பிடரி வரை கிழித்தார். - அல்லது பிளந்தார் - பிறகு அவர் (படுத்திருந்தவரின்) மற்றொரு பக்கம் சென்று முதல் பக்கத்தில் செய்ததைப் போன்றே செய்தார். இந்தப் பக்கத்தில் செய்து முடிப்பதற்குள் அந்தப் பக்கம் பழையபடி ஒழுங்காக ஆம்விடுகிறது.. பிறகு அந்தப் பக்கத்திற்குச் செல்கிறார். ஆரம்பத்தில் செய்ததைப் போன்றே (திரும்பத் திரும்பச்) செய்கிறார். நான், 'அல்லாஹ் தூயவன்! இவர்கள் இருவரும் யார்?' என்று கேட்டேன். அவ்விரு(வான)வரும் என்னிடம், செல்லுங்கள், செல்லுங்கள்' என்றனர்.

….

நான் அவ்விருவரிடமும், 'நேற்றிரவு முதல் நான் பல விந்தைகளைக் கண்டுள்ளேன். நான் கண்ட இவைதாம் என்ன?' என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம், '(நீங்கள் கண்ட காட்சிகளின் விவரங்களை) உங்களுக்கு நாங்கள் தெரிவிக்கிறோம்.

…

தன்னுடைய முகவாய், மூக்குத் துவாரம், கண் ஆகியவற்றை பிடரிவரை கிழிக்கப்பட்டுக்கொண்டிருந்த மனிதனுக்கு அருகில் நீங்கள் சென்றீர்களே! அந்த மனிதன் அதிகாலையில் தம் வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு பொய்யைச் சொல்ல அது (பல்வேறு வழிகளில்) உலகம் முழுவதும் போய்ச் சேரும்.

அறிவிப்பவர் : சமுரா இப்னு ஜுன்தப்(ரலி, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் சுருக்கம்)

6) விளையாட்டுக்காகக் கூட பொய் பேசக் கூடாது: -

முஆவியா இப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'மக்களை சிரிக்க வைப்பதற்காக பேசுபவனுக்கும் பொய் சொல்பவனுக்கும் கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக! கேடு உண்டாகட்டுமாக' என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி

இஸ்லாத்தில் விளையாட்டாகப் பொய் பேசுவது கூட தடுக்கப்பட்டுள்ளது. அது போல பிறரை சந்தோசப்படுத்துவதற்காகவும் பொய் பேசக் கூடாது.

எனவே சகோதர, சகோதரிகளே! இஸ்லாம் கடுமையாக எச்சரித்திருக்கும் இத்தகைய தீய செயல்களான பொய் பேசுதல், பிறரை துன்புறுத்தி சந்தோசம் அடைதல், ஏமாற்றுதல் ஆகியவைகளையே முழு மூச்சாக செயல்படுத்தும் மிக மோசமான மூடர்களின் மூடர் தினத்தை விட்டும் முஸ்லிம்களாகிய நாhம் தவிர்ந்திருப்பதோடு அல்லாமல் பிறருக்கும் இதனுடைய தீமைகளை எடுத்துக் கூறி இதனை நமது சமூக மக்களிடமிருந்து களைவதற்கு முயற்சிக்க வேண்டும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றலையும் மனவலிமையையும் தந்தருள்வானாகவும்.

கட்டுரைக்கு உதவிய தளங்கள்: -

Read more...

ஆபிஸ் டாக்குமென்டுகளை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க

ஆபிஸ் டாக்குமென்டுகளை பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க

நாம் MS OFFICE-ல் நாம் MS WORD,MS EXCEL,MS ACCESS,

MS POWER POINT உபயோகித்து வருகின்றோம்.

முக்கிய விவரங்களை - நமது தனிப்பட்ட

கணக்கு விவரங்களை - பதிவிட்டு இருப்போம்.

நாம் இல்லாத சமயத்தில் யாராவது நமது

கடிதத்தையோ - கணக்கு விவரங்களையோ

பார்த்தால் நமக்கு சங்கடம் வரலாம். அவர்கள்

அவ்வாறு பார்க்காமல் இருக்க நாம் நமது

கணக்கு விவரங்கள் மற்றும் கடிதங்களை

பாஸ்வேர்ட் கொடுதது பாதுகாக்க முடியும்.

அதை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.

முதலில் நாம் பாதுகாக்க வேண்டிய

கடிதத்தை திறந்து கொள்ளுங்கள்.

அடுத்து அதை Save us கொடுங்கள்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4Nq92WUCBl1a0cZtuTEvvLRMqsyLKbUv7Tu8f6-9TeJ38bZM4kZ8EdcM1SslrEkUZvDglVC3PO1Pxj5LPPXRM1fc5AGjkv_lnjATPKYm4i2ahr8YhUfbH7xtLrouBOHF5VmViQmFIr8K5/s320/save+as.jpg

உங்களுக்கு இந்தWindow ஓப்பன் ஆகும்.

அதில் பார்த்தீர்களே யானால் கீழே

Tools என்கிற காலம் இருக்கும். அதை

தேர்வு செய்தால் உங்களுக்கு இந்த

Window ஓப்பன் ஆகும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3YAizuvUDsdRbvMfgUXwF-i5Aa2cHrIM2rEj-fm9T8lHO689XynN-jBy9d23hPGexTrWG9p8Q0RBy19VKyhUjtyNnhfQm9c_sT40aAsoNomOMLlkcQvwPRVOlBVhSB2Cs4lGw_2FvoIwm/s320/General+Options.jpg

இப்போது இதில் உள்ள

General Options கிளிக் செய்யவும்.

உங்களுக்கு General Options Window

ஓப்பன் ஆகும். அதில் உள்ள

File encryption options for this document

கீழ் உள்ள

Password to Open என்கிற பெட்டியின்

உள்ளே நீங்கள் சேமிக்க விரும்பும்

பாஸ்வேர்டை டைப் செய்யவும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjj0t9NAC0QQ8JmXOYWAgVhIRxnj9jso5SdHeQDgR_ayzhU5jKuLYPqTKgMwQaPQLZsHX4ZuQAwrPQKrydaZVZ52Yitaco7hloq8xQNa82CbyNEgksA0wNEUoNlhXKsyZpe_3rdpYwJv_Zl/s320/General+Options-1.jpg

ஓகே கொடுக்கவும். மீண்டும் உங்களுக்கு

Confirm Password வரும் . அதிலும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgG-z3Udrk6fiSNBHa01qX6N_9qQfJ8DG2LCwZpm6LWAGR-D9Kdcd9DZfwHTFOBnNaAjCU7nfI9IFsW__Tpa4bZzMVxPmSEHFrnczTJkOH7H_sxcs1x271VDBmu9YiSyrnnQ2dYZmAAvHJL/s320/confirm+password.jpg

உங்களுடைய முந்தைய பாஸ்வேர்டையே

டைப்செய்யவும். ஓகே கொடுத்து

வெளியேறவும். அடுத்து Save செய்யவும்.

இப்போது அனைத்தையும் மூடி வெளியேறவும்.

இப்போது மீண்டும் அந்த ஆபிஸ் வேர்டையோ -

எக்ஸெல்லையோ திறக்கவும்.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_IefY4AtKGVF2gGSgLMmcR86d-fgCzdod3ZV0BXq84mcOo07U-RokNKuB6zxLnIXiMuNv3u4QhAT_GFUnAxuSXgl2Bpq7akdtfJOd6klATzazJYl_qaeOUBc57NRWH0KxbxMPWR-jps-w/s320/password.jpg

உங்களுக்குஓப்பன் ஆகும் முன் உங்களிடம் பாஸ்வேர்ட்

கேட்கும்.நீங்கள் முன்பு கொடுத்த பாஸ்வேர்ட் கொடுத்தால்

தான் உங்களுடைய டாக்குமெண்ட்-கணக்குகள் ஓப்பன்

ஆகும். இதன்படி உங்கள் டாக்குமென்ட்களை

கணக்கு விவரங்களை பாதுகாக்கலாம்.



Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP