بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: அபுதாபியில் நடைபெற்ற கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா!


அபுதாபியில் நடைபெற்ற கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா!

>> வெள்ளி, 25 ஜனவரி, 2008

சத்திய மார்க்கத்தை பிறமக்களும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அல்லாத மக்கள் மட்டும் பங்கேற்க்கும் 'கட்டுரை போட்டி' யினை தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அபுதாபி கிளை கடந்த 4 வருடங்களாக நடத்தி வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டு (2007) 'இன்றை நவீன உலகில் இஸ்லாம்' எனும் தலைப்பினை அறிவிப்பு செய்து அழைப்பு விடுத்தது.
இக்கட்டுரைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசகர் சகோ. ஃபஜ்லுல்லாஹ் அவர்கள் செயல்பட்டார்கள். இதனை தொடர்ந்து பல்வேறு முஸ்லிமல்லாத அன்பர்களிடமிருந்து பல கட்டுரைகள் வந்து சேர்ந்தன. இக்கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்ந்து எடுத்து, அவற்றிற்கு பரிசுகளும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்காக ஓர் பரிசளிப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அவ்விழாவுடன் இஸ்லாம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியினையும் (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்தது.
கடந்த 28-12-2007 அன்று அபுதாபி நஜ்தா ரோட்டில் அமைந்திருக்கும் ஏர்லைன்ஸ் ரெஸ்டாரன்ட் ஹாலில் வைத்து இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ. முஹம்மது ஷேக் அவர்கள் தலைமை தாங்கினார்.
கட்டுரை போட்டியில் பங்குபெற்ற கட்டுரைகள் குறித்த நிறைகள், அதில் எழுப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் போன்றவைகளை தொகுத்து முன்னுரை வழங்கப்பட்டது. இம்முன்னுரையினை அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசகர் சகோ. யுசுப் அலி அவர்கள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பரிசளிப்பு நடைபெற்றது. முஸ்லிம் அல்லாத அன்பர்கள் மட்டும் கலந்து கொண்ட 'இன்றை நவீன உலகில் இஸ்லாம்' கட்டுரைப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் விபரம்:
1. முதல் பரிசு : சகோதரி. ஸ்ரீ தேவி முத்துக்குமரன்
2. இரண்டாவது பரிசு: சகோதரர்: ரமேஷ் கண்ணன்
3. மூன்றாவது பரிசு: சகோதரர்: துரை
பரிசளிப்பினை தொடர்ந்து 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் அமீரக TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் இஸ்லாம் குறித்த அறிமுக உரையினை நிகழ்த்தினார்கள். அறிமுக உரையினை தொடர்ந்து இஸ்லாம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முஸ்லிமல்லாத சகோதரர்களின் ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் பதிலளித்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிற மத சகேதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த அரிய பல உண்மைகளை தெரிந்து கொண்டனர். அல்ஹம்துலிலல்லாஹ். அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத் துணைதலைவர் சகோ. ஷேக் முஹம்மது அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.


இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபுதாபி மண்டல பொருளாளர் சகோ. சுல்தான் சலாஹுதீன் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக செய்திருந்தனர். முஸாஃபா பகுதியிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகளை முஸாஃபா கிளை தலைவர் அப்துல்லாஹ் தலைமையில் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடந்த மூன்று வருட முதல் பரிசு கட்டுரைகளின் தொகுப்பு, சகோ. பி.ஜெ அவர்கள் உரையாற்றிய 'உலக அதிசயம் எது' CD மற்றும் 'அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்' புத்தகம் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே!!!!

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP