بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து: கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு 10 பெண்கள் போட்டி


கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு 10 பெண்கள் போட்டி

>> திங்கள், 3 அக்டோபர், 2011

கீழக்கரை:வரும் 17ல் நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு 10 பெண்கள் போட்டியிடுகின்றனர்.
கீழக்கரை நகராட்சி தலைவர் பதவியிடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில தினங்களாக தேர்தல் பரபரப்பு இல்லாமல் காணப்பட்டது. இந் நிலையில் 11 பெண்கள் மனு தாக்கல் செய்தனர்.இதில் ஒருவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.மற்ற 10 பேரில் இன்று 3 மணி வரை யாரும் வாபஸ் பெறவில்லை.
அ.தி.மு.க., சார்பில் ராவியத்துல் கதரியா,தே.மு.தி.க., சார்பில் ஜீனத் மரியம், தி.மு.க.,சார்பில் தாஜ்நிசா,பொது வேட்பாளராக மெகர் பானு,முத்துச்சாமிபுரம் கதிராயி உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர்.125 கவுன்சிலர்களில் 13 பேர் இன்று வாபஸ் பெற்றனர்.நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் அதிகபட்சமாக 3வது வார்டில் 10 பேரும்,குறைந்த பட்சமாக இரண்டாவது வார்டில் இருவர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னம் இன்று தேர்தல் அலுவலர் போஸ் மேற்பார்வையில் உதவி தேர்தல் அலுவர்களால் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP