بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து


மீலாது விழா கொண்டாடலாமா?

>> வியாழன், 12 மார்ச், 2009

மீலாது விழா கொண்டாடலாமா?
எம். முஜிபுர் ரஹ்மான் உமரீ

فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ
''எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63)
நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழாரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமல்லவா! என்ற நினைவு வருகிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் இவ்வளவு பிரபலமாகியிருக்கும் இம்மாதத்தில் நடைபெறும் செயல்கள் அல்லாஹ்வும் அவனது தூதர்(ஸல்) அவர்களும் வழிகாட்டியதின் அடிப்படையில் அமையவேண்டுமல்லவா? எனவே இம்மாதத்தில் நாம் செய்யும் செயல்களை அல்குர்ஆன் மற்றும் நபிமொழியின் ஒளியில் ஆராய்வோமே!
மீலாது விழா ஆரம்பமானது எப்போது?நபி(ஸல்) அவர்களோ, நாற்பெரும் கலீஃபாக்களோ, மற்ற நபித்தோழர்களோ, அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களோ, அல்லது நபி(ஸல்) அவர்களால் போற்றப்பட்ட முந்தய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்களோ மீலாது விழா கொண்டாடவில்லை. அப்படியானால் மீலாது விழா ஆரம்பமானது எப்போது? திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 357 முதல் 567 வரை மிஸ்ரை (எகிப்து) ஆண்டு வந்த ஃபாத்திமியீன்களின் ஆட்சியில் அப்துல்லாஹ் பின் மைமூன் அல் கதாஹ் என்ற யூதனால் இஸ்லாத்தின் பெயரால் பல விழாக்கள் அரங்கேற்றப்பட்டன. அதில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் ஒன்று. (நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 - பக்கம் 172)
ஆக இவ்விழா ஹிஜ்ரீ நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மீலாது விழாவும் சஹாபாக்களும்நாற்பெரும் கலீஃபாக்களும் மற்ற நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் தோன்றிய தாபியீன்களும் மார்க்கத்தை நன்கறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்களை மிக அதிகமாக நேசித்து மார்க்க அடிப்படையிலேயே தம் முழு வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முழுமையாக பாடுபட்டவர்கள் என்பதை நாம் அனைவரும் ஏற்றுள்ளோம், மீலாது விழா கொண்டாடுவது நன்மையான செயல் என்றோ, அது நபி(ஸல்) அவர்களுக்கு புகழ் சேர்க்குமென்றோ எண்ணியிருந்தால் அவர்கள் பலவிழாக்களை கொண்டாடியிருப்பார்கள். ஆனால் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கென எந்த விழாவும் கொண்டாடவில்லை.
மீலாது விழாவும் கிரிஸ்மஸும்ஈஸா(அலை) அவர்களுக்கு கிருத்துவர்கள் பிறந்தநாள் விழாக் கொண்டாடுவது போன்று முஸ்லிம்களான நாம் நபி(ஸல்) அவர்களுக்கு விழாக் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த ஒப்பீடு சரிதானா? பிறசமயக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: அபூதாவூத்)
கிருத்துவர்கள் பிறந்த நாளை விழா நாளாக கருதுவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாம் கிருத்துவ மதத்தை சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. எனவே நபிகளாரின் எச்சரிக்கைக்குப் பயந்து பிறந்த நாள் விழா மற்றும் இதுபோன்ற பிறமதக் கலாச்சாரங்களை விட்டும் முற்றிலும் விலகி, முழுமையான இஸ்லாமியராக வாழ முயற்சிக்க வேண்டும்.
அரபுக் கவிதைகள்பிறந்த நாளை கொண்டாடும் விதமாக பல விசேஷ வழிபாடுகள் நம் சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளன. அதில் இன்றியமையாததாகக் கருதப்படுவது மவ்லிது என்ற பெயரால் பாடப்படும் அரபுக் கவிதைகள்தான். இக்கவிதைகளுக்கு நம் சமுதாயத்தில் மகத்தான மதிப்பிருக்கிறது. ஆனால் இஸ்லாத்தில் இதற்கெதிரான எச்சரிக்கைதான் இருக்கிறது. ஆனால் அவை பள்ளிவாசலிலும் கூட கூட்டம் கூடி, புனித வழிபாடாகக் கருதிப்பாடப்படுகிறது. நபி(ஸல்) அவர்களைப் புகழ்வதற்காக இயற்றப்பட்ட இப்பாடல்களின் பல வரிகள் புகழ்ச்சியில் வரம்புமீறி நபி(ஸல்) அவர்களுக்கு இறைத்தன்மைகளை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. நபி(ஸல்) அவர்களிடம் உதவிதேடுவது, அவர்களிடம் பாதுகாப்புத் தேடுவது, அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது போன்ற ஷிர்க்கான (இறைவனுக்கு இணைவைக்கும்) கருத்துக்களை இப்பாடல்கள் தன்னுள் கொண்டுள்ளன.
எந்தக் கொள்கையை விட்டும் மக்களைத் தடுப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் நபியாக அனுப்பப்பட்டார்களோ அதே கொள்கையைக் கொண்ட பாடல்களை அவர்களை புகழ்வதற்கே பாடப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா? அதைவிடக் கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்படவேண்டிய பள்ளிவாயிலிலேயே அவனுக்கு இணைவைக்கும் இக்கவிதைகள் மிகவும் பக்திப்பரவசத்தோடு பாடப்படுவதுதான். அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலகிவிட வேண்டும்.
பிறந்த நாள் விழாவா? இறந்த நாள் விழாவா?இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவெனில் எந்த நாளில் நபி(ஸல்)அவர்கள் பிறந்தார்கள் என்று கூறுகின்றார்களோ அதே நாளில்தான் நபி(ஸல்)அவர்கள் இறந்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க இவர்களின் விழாக்களும் வழிபாடுகளும் நபி(ஸல்)அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?
இது சரியான காரணம்தானா?மீலாது விழாவிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாவிட்டாலும் நபிகளாரை கண்ணியப்படுத்தும் விதமாக நாமாகக் கொண்டாட வேண்டும் என்று சிலர் காரணம் கூறுவர். வெளிப்படையாகப் பார்த்தால் இக்கருத்து நபி(ஸல்) அவர்களை போற்றுவது போன்று தோன்றினாலும் உண்மையில் இது நபி(ஸல்) அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்தும் வார்த்தையாகும். இதனடிப்படையில் நபி(ஸல்) அவர்கள் சில நல்லறங்களை இச்சமுதாயத்திற்கு சொல்லவில்லை, மறைத்துவிட்டார்கள் என்று கூற வேண்டிவரும். நபித்தோழர்களும் இந்நல்லறங்களை செய்யவில்லை என்று அவர்கள் மீதும் குறை கூறவேண்டிவரும். -நவூது பில்லாஹ்- இந்நிலையை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்:நல்லறங்கள் அனைத்தையும் தத்தமது சமுதாயத்திற்கு அறிவித்துவிடுமாறு அல்லாஹ் அனைத்து நபிமார்களுக்கும் கட்டளையிட்டுள்ளான். (ஹதீஸின் சுருக்கம் - முஸ்லிம்)
நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் தனக்கு வழங்கப்பட்ட தூதுப்பணியை முழுமையாக நிறைவேற்றியவர்களும் இறுதி நபியும் ஆவார்கள். அவர்கள் இச்சமுதாயத்திற்கு தேவையான எந்தச் சட்டத்தையும் உபதேசத்தையும் கூறாமல் விட்டுவிடவில்லை. மீலாது விழாக் கொண்டாடுவது மார்க்கத்தில் ஒரு அங்கமாக இருக்குமேயானால் நிச்சயம் அதனையும் சொல்லியிருப்பார்கள். செய்திருப்பார்கள். அதனை நபித்தோழர்களும் பின்பற்றியிருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்களை நேசிப்பது எப்படி?
வருடத்தில் இது போன்ற ஓரிரு விழாக்களை கொண்டாடிவிட்டு, அதன் பிறகு நாம் நினைத்தது போன்று வாழ்ந்து கொள்வது நபி(ஸல்)அவர்களை நேசிப்பதாகாது. நம் வாழ்வின் அனைத்துத்துறைகளையும் அனைத்துச் செயல்களையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளவேண்டும். அவர்களை முழுமையாக பின்பற்றவேண்டும்.
இதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
﴿ قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمْ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ ﴾
நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கக் கூடியவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்! அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான் என்று நபியே நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)
உங்களில் ஒவ்வொருவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவீர்கள் மறுப்பவரைத் தவிர என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று தோழர்கள் கேட்டனர். என்னைப் பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவார். எனக்கு மாறுசெய்பவர் நிச்சயமாக என்னை மறுத்தவராவார் -அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்- என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
எனவே நபி(ஸல்)அவர்களை பின்பற்றி நடப்பதே அவர்களை மதிப்பதின் அடையாளமாகும். மார்க்கம் முழுமையாக்கப்பட்டுவிட்டது. அல்லாஹ் நபி(ஸல்)அவர்களோடு இம்மார்க்கத்ததை முழுமையாக்கிவிட்டதாக குர்ஆனில் அறிவித்துவிட்டான்.

﴿ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا﴾
இன்றய தினம் உங்களுடைய மார்க்கத்தை உங்களுக்காக நாம் முழுமையாக்கி விட்டேன். நம்முடைய அருட்கொடையை உங்கள் மீது பரிபூரணப்படுத்தி விட்டேன். உங்களுடைய மார்க்கமாக நான் இஸ்லாத்தைப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
இந்த வசனம் ஹஜ்ஜத்துல் விதாவில் (விடைபெரும் ஹஜ்ஜில்) அரஃபா தினத்தன்று இறங்குகிறது. நபி(ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போதே மார்க்கம் முழுமை பெற்றுவிட்டது எனும்போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவர்கள் கற்றுத்தராத ஒன்றை மார்க்கத்தில் இணைக்கவோ, அவர்கள் கட்டளையிட்டவற்றை நீக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது. இதனடிப்படையில் மீலாது விழா என்பது நபி(ஸல்) அவர்கள் மரணித்து நான்கு நூற்றாண்டுகளுக்கு பிறகு ஆரம்பிக்கப்பட்டது எனும்போது அதற்கு மார்க்க சாயம் பூசுவது இறைவனுடைய அதிகாரத்தில் நமது கரங்களை நுழைப்பதாகும். இதுபோன்று மார்க்க விஷயத்தில் விளையாடிய யூத, கிருத்துவர்களுக்கு கிடைத்த தண்டனைகளையும் கிடைக்கவிருக்கும் மறுமை வேதனைகளையும் திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான். எனவே நாம் இதுபோன்று மார்க்கத்தில் புதிய செயல்களை உறுவாக்குவதை விட்டும் முற்றிலும் தூரமாகி விடவேண்டும்.
மார்க்கத்தில் நூதனச் செயல்மார்க்கத்தில் புதிதாக உறுவாக்கப்படுபவை அனைத்தும் பித்அத் (மார்க்கத்தில் நூதனச்) செயலாகும். அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களும் கற்றுதராதவற்றை மார்க்கத்தின் அங்கமாக நினைத்து செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக அது வழிகேடாகும். அது மறுமையில் நிராகரிக்கப்பட்டுவிடும். அதற்குரிய தண்டனையும் கிடைக்கும்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்படும் அனைத்தும் வழிகேடாகும். (நூல்: புகாரி)யார் நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக உறுவாக்குகின்றாரோ அது மறுக்கப்பட்டுவிடும். (நூல்: முஸ்லிம்)
மஹ்ஷரில் கவ்ஸர் எனும் தடாகத்திலிருந்து நபி(ஸல்) அவர்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பார்கள். அதில் நீர் அருந்துவதற்காக மார்க்கத்தில் நூதனச் செயல்களை உண்டாக்கியவர்களும் வருவார்கள். அவர்களை தண்ணீர் அருந்த விடாமல் மலக்குகள் இழுத்துச் சென்று விடுவார்கள். (ஹதீஸின் சுருக்கம்: புகாரி)
எனவே மீலாது விழாவும் மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டவையே! இதற்காக செலவிடப்படும் பணத்திற்கோ, உழைப்பிற்கோ அல்லாஹ்விடத்தில் எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக மஹ்ஷரில் நபி(ஸல்)அவர்கள் புகட்டும் தண்ணீரை அருந்தும் வாய்ப்பை இழந்து கொடிய வெப்பத்தில் தாகத்தால் பரிதவிக்க நேரிடும்.
எனவே அன்பிற்கினிய சகோதரர்களே! மீலாது விழா உட்பட மார்க்கத்தில் முரணான எந்தச் செயலுக்கும் பொருளாலோ, உழைப்பாலோ, ஆலோசனையாலோ வேறு எந்த விதத்திலும் உதவவேண்டாம் என அன்புடன் வேண்டுகிறோம்.

நன்றி: இஸ்லாம் கல்வி.காம்

Read more...

முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)

>> ஞாயிறு, 4 ஜனவரி, 2009

முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்,

நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107) 

ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட்

[இப் பூமியில் வாழ்ந்த கோடானுகோடி மனிதர்களில் வரலாற்றின் போக்கில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும் அளவுக்கு மிகப்பெரும் செல்வாக்கு வல்லமை பெற்றிருந்தவர்கள் யார் யார் என்பதை மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் The 100 என்ற தன்னுடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முதலாம் இடத்தை கொடுத்து அதற்கான காரணத்தையும் கொடுத்திருக்கிறார். இனி அவரது வரிகளை படிப்போம்.]

இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.

எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் மதங்களின் ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதின்மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நூலில் இடம் பெற்றுள்ளோரில் பெரும்பான்மையானவர்கள் பண்பாடு மிக்க அல்லது அரசியலில் நடுநாயகமாக விளங்கிய நாகரிகத்தின் கேத்திரங்களில் பிறந்து வளர்வதற்குரிய வாய்ப்பினைப் பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், முஹம்மதோ (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) வாணிபம், கலை, கல்வி ஆகியவற்றின் கேத்திரங்களுக்குத் தொலைவிலுள்ளதும், அக்காலத்தில் உலகத்தின் பின்தங்கிய பகுதிகளாகவும் இருந்த தென் அரேபிய நாட்டிலுள்ள மக்கா என்னும் பேரூரில் கி.பி. 570ஆம் ஆண்டில் பிறந்தார்கள். ஆறு வயதிலேயே அநாதையாகிவிட்ட அவர்கள், எளிய மூழ்நிலையிலே வளர்க்கப்பட்டார்கள்.

அன்னார் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருந்தார் என இஸ்லாமிய வரலாறு நமக்குச் சொல்லுகிறது. தம் இருபத்தைந்தாம் வயதில் அவர்கள் செல்வச் சீமாட்டியாக இருந்த ஒரு விதவையை மணந்தார்கள். அதிலிருந்து அவர்களின் பொருளாதார நிலை சீரடைந்தது. எனினும், அவர்கள் தம் நாற்பதாம் வயதை எட்டும் முன்னர், குறிப்பிடத்தக்கவர்கள் என்பதற்குரிய வெளி அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தன.

அக்காலத்தில் பெரும்பான்மையான அரபுகள் பிற்பட்டோராகவும் பல தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தனர். எனினும், மக்காவில் அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையுடையோராய் யூதர்களும், கிறிஸ்தவர்களும் இருந்தனர். அவர்களிடமிருந்தே பிரபஞ்சம் முழுமையும் ஆளுகின்ற அனைத்து வல்லமையுள்ள ஏக இறைவனைப் பற்றி முஹம்மது முதலில் அறியலானார்கள் என்பதில் ஐயமில்லை. அவர்களுக்கு நாற்பது வயதானபோது, உண்மையான ஏக இறைவன் அல்லாஹ் தம்முடன் பேசுகிறான் என்றும், சத்தியத்தைப் பரப்புவதற்குத் தம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான் என்றும் முஹம்மது உறுதியான நம்பிக்கை கொண்டார்கள்.

இதன் பின், மூன்றாண்டு காலம் முஹம்மது (ஸல்லல்லாஹ
¤ அலைஹி வஸல்லம்) தம் நெருங்கிய தோழர்களுக்கும், துணைவர்களுக்கும் போதனை செய்தார்கள். பின் சுமார் 613ஆம் ஆண்டிலிருந்து, பகிரங்கமாக போதனை செய்யலானார்கள்.

பையப்பைய, தம் கொள்கையை ஏற்கும் ஆதரவாளர்களை அவர்கள் பெறத் துவங்கவே, மக்காவின் அதிகார வர்க்கத்தினர் அன்னாரை அபாயகரமாகத் தொல்லை தரும் ஒருவராகக் கருதலானர்கள். கி.பி. 622ஆம் ஆண்டில், தம் நலனுக்குப் பாதுகாப்பில்லை எனக் கருதி, மக்காவுக்கு வடக்கே இருநூறு கல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு ஏகினார்கள். அங்கு அவர்களுக்குக் கணிசமான அரசியல் வல்லமையுள்ள பதவி கிட்டிற்று.

இவ்வாறு அவர்கள் மதீனாவுக்குச் சென்ற ஹிஜ்ரா என்ற இந்திகழ்ச்சிதான், நபிகள் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. மக்காவில் அவர்களைப் பின்பற்றியோர் மிகச் சிலரே இருந்தனர். ஆனால் மதீனாவிலோ, மிகுந்த ஆதரவாளர்களைப் பெறலானார்கள். இதனால் அவர்கள் பெற்றுக்கொண்ட செல்வாக்கு ஏறத்தாழ எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு தலைவராக்கிற்று. அடுத்த சில ஆண்டுகளில் முஹம்மது (ஸல்லல்லாஹ
¤ அலைஹி வஸல்லம்) அவர்களை பின்பற்றுவோர் தொகைவேகமாகப் பெருகத் துவங்கியதும் மக்காவுக்கும் மதீனாவுக்கு மிடையே தொடர்ந்து பல போர்கள் நிகழ்ந்தன. இறுதியில் 630ஆம் ஆண்டில் முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்), மாபெரும் வெற்றியாளராக மக்காவுக்குள் திரும்பி வந்ததும், இப்போர் ஒய்ந்தது. அரபுக் கேத்திரங்கள், இப்புதிய மார்க்கத்துக்கு விரைந்து வந்து அதனை ஏற்றுக் கொள்வதை, முஹம்மது அவர்களின் வாழ்வின் எஞ்சிய இரண்டரை ஆண்டுகளும் கண்டன, அவர்கள் 632ஆம் ஆண்டில் காலமானபோது தென் அரேபியா முழுவதிலும் பேராற்றல் கொண்ட ஆட்சியாளராக விளங்கினார்கள்.

அரபு நாட்டின் படவீகள் என்னும் நாடோடிக் கோத்திரத்தார் வெறி கொண்ட வீரத்தோடு போராடுவார்கள் எனப் பெயர் பெற்றிருந்தனர். ஆனால், ஒற்றுமையின்றி, ஒருவரையொருவர் ஒழிக்கும் போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறு தொகையினர் அவர்கள், நாடோடி வாழ்க்கையின்றி, நிலையாக வேளாண்மைகளில் ஈடுபட்டிருந்த வடபகுதி அரசுகளின் பெரிய படைகளுக்கு இணையாக இந்த படவீகள் இருக்கவில்லை. ஆனால் வரலாற்றில் முதன்முறையாக முஹம்மது அவர்களால் ஐக்கியப்படுத்தப்பட்டு, உண்மையான ஒரே இறைவன் மீது கொண்ட ஆழிய நம்பிக்கையால் உந்தப்பட்ட இச்சிறுசிறு அரபுப் படைகள், மனித வரலாற்றிலே பேராச்சரியம் தரத்தக்க வெற்றித் தொடர்களில் தங்களை ஈடுபடுத்தலாயின.

அரபு நாட்டுக்கு வடகிழக்கில் சாஸ்ஸானியர்கள் புதிய பேரரசு பரந்து கிடந்து, வடமேற்கில் கான்ஸ்டாண்டி நோபிளை மையமாகக் கொண்ட பைஸாந்தியம் என்னும் கிழக்கு ரோமப் பேரரசு இருந்தது. எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இத்தகு எதிரிகளுடன் அரபு ஈடுகொடுக்க முடியதோர்தாம். எனினும், எழுச்சியடைந்த இந்த அரபுகள் மெஸபொட்டோமியா, சிரியா, பாலஸ்தீனம் முழுவதையும் வெகுவேகமாக வெற்றி கொண்டனர். கி.பி. 642ஆம் ஆண்டில் பெஸாந்தியப் பேரரசிடமிருந்து எகிப்தைப் கைப்பற்றினர். 637இல் காதிஸிய்யாவிலும், 642இல் நஹவாத்திலும் நடைபெற்ற முக்கியப் போர்களில் பாரசீகப் படைகள் நசுக்கப்பட்டன.

முஹம்மது (ஸல்லல்லாஹ
¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் நெருங்கிய தோழர்கள், முஹம்மது அவர்களைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப் பேற்றவர்களுமான அபூபக்ர், உமர் இப்னு அல்-கத்தாப் (ரளியல்லாஹ¤ அன்ஹ¤ம்) ஆகியோரின் தலைமையில் வென்ற நிலங்களுடன் அரபுகளின் முன்னேறுதல் நின்றுவிடவில்லை. கி.பி. 711க்குள் அரபுப் படைகள், வட ஆஃப்ரிக்காவிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரையிலும் உள்ள பகுதிகளைத் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தன. அங்கிருந்து அவை வடபுலம் நோக்கித் திரும்பி, ஜிப்ரால்டர் கடலிடுக்கைக் கடந்து, ஸ்பெயின் நாட்டின் விஸிகோதிக் அரசை வென்றன.

கிறிஸ்துவ ஐரோப்பா முழுவதையும் முஸ்லிம்கள் வென்று விடுவார்களோ என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. ஆனால், 732ஆம் ஆண்டில், ஃபிரான்சின் மையப் பகுதிவரை முன்னேறிவிடட் ஒரு முஸ்லிம் படை, பரங்கியரால் டூர்ஸ் போரில் தோற்கடிக்கப்பட்டது. இருப்பினும் கூட நபியவர்களின் சொல்லால் உணர்வு பெற்ற, இந்த படவீக் கோத்திரத்தினர், குறைந்த ஒரு நூற்றாண்டு காலப் போர்களின் மூலமாக, அதுவரை உலகு கண்டிராத -இந்திய எல்லைகளிலிருந்து அட்லாண்டிக் மாகடல் வரை பரந்திருந்த ஒரு பேரரசை நிறுவினார்கள். இப்படைகள் வென்ற நிலங்களிலெல்லாம், அப்புதிய மார்க்கத்தை மக்கள் பெரும் அளவில் தழுவலாயினர்.

ஆனால், இவ்வெற்றிகள் அனைத்துமே நிலைபெற்றவையாக இருக்கவில்லை. பாரசீகர்கள் நபிகள் மார்க்கத்துக்கு விசுவாசம் பூண்டவர்களாக இருந்து வந்தாலும் கூட, அரபுகளிடமிருந்து தம் சுதந்திரத்தை மீட்டுக் கொண்டனர். ஸ்பெயின் நாட்டின் எழுநூறு ஆண்டுகள் போர் நடப்புகளுக்குப் பிறகு, அந்தத் தீபகற்பம் முழுவதையும் கிறிஸ்துவர்கள் மறு வெற்றி கொண்டனர். இருப்பினுங்கூடப் பண்டையப் பண்பாட்டின் இரு தொட்டில்களாக விளங்கிய மெஸ பொட்டோமியாவும் (இன்றைய இராக்) எகிப்தும் அரபு நாடுகளாகவே இருக்கின்றன. இது போன்றே வட ஆஃப்ரிக்காவின் முழுக் கடற்கரைப் பகுதிகளும் இருக்கின்றன. முஸ்லிம்கள் துவக்கத்தில் வென்ற நாடுகளின் எல்லைகளுக்குத் தொலைவிலும் இப்புதிய மார்க்கம் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் தொடர்ந்து பரவியவாறே இருந்தது. இப்போது, ஆஃப்ரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், இன்னும் அதிகமாகவே பாகிஸ்தானிலும் கூட வட இந்தியாவிலும், இந்தோனேஷியாவிலும், முஸ்லிம்கள் கோடிக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர். இந்தோனேஷியாவில், இப்புது மார்க்கமே ஒருமைப்பாட்டின் அம்சமாக அமைந்துள்ளது. ஆனால், இந்தியத் துணைக் கண்டத்தில் இந்து முஸ்லீம் பூசல் ஒற்றுமைக்குப் பெரும் தடையாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ
¤ அலைஹி வஸல்லம்) யின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு (அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.(St. PAUL)

ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல்(THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) தான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன.

 அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) உண்டு பண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி (ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம்) சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.வரலாற்று நிகழ்ச்சிகளில் முக்கியம் வாய்ந்த பல, தவிர்க்க முடியாமல் நிகழக் கூடியவை தாம்: அவற்றை நடத்துவதற்குரிய குறிப்பிட்ட தலைவர் ஒருவர் இல்லாவிடினும் சரியே என்று சொல்லக்கூடும். சான்றாக ஸைமன் பொலீவர் பிறந்திருக்காவிட்டாலும் கூட, ஸ்பெயினிடமிருந்து தென் அமெரிக்கக் காலனிகள் தங்கள் விடுதலையைப் பெற்றுத்தானிருக்கும். அதனால் அரேபிய வெற்றிகளைப் பற்றி இவ்வாறு சொல்ல முடியாது. ஏனெனில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹ

¤ அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்துக்கு முன், இப்படி எதுவும் நிகழ்ந்ததில்லை. எனவே அன்னார் இல்லாமலே இத்தகு வெற்றிகளைப் பெற்றிருக்கும் என நம்புவதற்கும் நியாயமில்லை. மனித வரலாற்றில் இவ்வெற்றிகளுக்கு ஒத்தவையாக எவற்றையும் பற்றிச் சொல்ல முடியுமானால் அவை செங்கிஸ்கான் தலைமையில் மங்கோலியர்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அடைந்த வெற்றிகளாகும். ஆனால், இவ்வெற்றிகள் அரபு வெற்றிகளைவிட, பரப்பளவில் மிகுந்திருந்தாலும்-நிலைத்திருக்கவில்லை. இன்று மங்கோலியர்கள் வசமுள்ள நிலப் பகுதி செங்கிஸ்கானுக்கு முன்னர் அவர்களிடமிருந்தது தான்.

ஆனால், அரபுகளின் வெற்றிகளோ, பெரிதும் வேறுப்பட்டவையாகும். இஸ்லாத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால் மட்டுமல்ல, அரபு மொழி, வரலாறு, பண்பாடு ஆகியவற்றாலும் இணைக்கப்பட்டு, இராக்கிலிருந்து மொரோக்கோவரை ஒரு சங்கிலித் தொடர்போல் அரபு நாடுகள் விரிந்து கிடக்கின்றன. குர்ஆன் இஸ்லாமிய சமயத்தின் மூலாதாரமாக அமைந்திருப்பதும், அது அரபு மொழியில் இருப்பதுமாகிய காரணங்கள் தாம் பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கிடையில் அம்மொழி ஒன்றுக்கொன்று விளங்காவிட்டார மொழிகளாகச் சிதறிச் சிதைந்து போகாமல் தடுக்கப்பட்டது என்று சொல்லலாம். இந்த அரபு நாடுகளுக்கிடையே, கணிசமான வேறுபாடுகளும், பிரிவுகளும் காணப்படுகின்றன என்பதும் உண்மைதான். எனினும், பகுதியளவிலான இவ்வொற்றுமைக் குறைவு இந்நாடுகளுக்கிடையே நிலவி வரும் ஒற்றுமையின் முக்கியம் வாய்ந்த அம்சங்களே தம் கண்களிலிருந்து மறைந்துவிடக் கூடாது. சான்றாக 1973-74 எண்ணை ஏற்றுமதித் தடையில் அரபு நாடுகள் மட்டுமே கலந்து கொண்டன. ஈரானும், இந்தோனேஷியாவும் அவை இஸ்லாமிய நாடுகளாக இருப்பினும் இதில் கலந்து கொள்ளவில்லை.

ஆக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அரபு வெற்றிகள், மானுட வரலாற்றில் இன்னும் முக்கியமான பங்கு வகித்து வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். சமயத் துறையிலும், உலகியல் துறையிலும் முஹம்மது நபி ஒருசேரப் பெற்ற ஈடில்லாத செல்வாக்குத்தான் மனித வரலாற்றில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரே தனி மனிதர் என்னும் தகுதிக்கு அவரை உரித்தாக்குகிறது என நான் கருதுகிறேன்.

நன்றி : The 100

ஆசிரியர்: மைக்கேல் ஹெச். ஹார்ட்

தமிழில்:

இரா. நடராசன்

மோ. வள்ளுவன் கிளாரன்ஸ் மோத்தா

மவ்லவி எம். அப்துல் வஹ்ஹாப்

பதிப்பாசிரியர் : மணவை முஸ்தபா

Published by:

Meera Publication

AE 103, Anna Nagar

Chennai - 600 040, India


 நன்றி: http://nidur.info/

Read more...

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ் - அமரேஷ் மிஸ்ரா

>> திங்கள், 1 டிசம்பர், 2008

மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ் - அமரேஷ் மிஸ்ரா


சனி, 29 நவம்பர் 2008

பயங்கரவாதத்தில் கூட்டணி?இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர்ச்சியடைய வைத்த மும்பை தீவிரவாதத் தாக்குதலை இந்திய இராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்து அனைவரையும் நிம்மதியாக மூச்சு விட வைத்திருக்கும் சூழலில், தற்பொழுது அனைவரின் கவனமும் இத்தாக்குதலின் பின்னணியில் செயல்பட்டவர்களை குறித்து அறிந்து கொள்வதில் நிலை கொண்டுள்ளது.

 

முதலில் சிமியின் மற்றொரு பதிப்பான டெக்கான் முஹாஜிதீன் என்ற புதிய தீவிரவாத அமைப்பு தான் இத்தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியிலும் செயல்பட்டுள்ளது என எப்பொழுதும் போல் மேல்மட்டத்தில் ஹிந்த்துவாவின் ஆக்டோபஸ் கரங்களால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள பத்திரிக்கைகளால் வெளியிடப்பட்ட மின்மடலை நம்பி அலறிய இந்திய உளவுத்துறை பின்னர் படிப்படியாக, பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ, லஷ்கரே தொய்பா, அல் காயிதா என ஊகங்களை வாரி வீசி வருகிறது.

 

இந்நிலையில் இத்தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சம்பவ இடத்தில் நேரில் இருந்து அனைத்தையும் கவனித்த பிரபல பத்திரிக்கையாளரும் மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான டாக்டர். அமரீஷ் மிஸ்ரா, அமிழ்ந்துக் கிடக்கும் உண்மைகளின் முடிச்சுகளை அவரது ஆழ்ந்த ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயல்கிறார். இந்திய உளவுத்துறையும் அரசும் வெறுமனே யூகங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் நம்பி எப்பொழுதும் போல் உண்மையான குற்றவாளிகளைக் கோட்டைவிடுவதை விடுத்து, நேர்மையாக இச்சந்தேகங்களின் பாலும் தனது கவனத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது நடுநிலையாளர்களின் விருப்பமாகும்.

 

இரண்டாயிரம் பக்கங்களையும் இரண்டு பாகங்களைக் கொண்ட டாக்டர். அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சமீபத்திய நூலான "War of Civilizations: India AD 1857" கடந்த மார்ச் 2008 இல் இந்திய துணை குடியரசுத் துணைத் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

டாக்டர். அம்ரீஷ் மிஸ்ராதிரு. அமரீஷ் மிஸ்ரா அவர்களின் சொற்களிலிருந்து....

 

அதிகாலை நான்கு மணியாகி விட்டிருந்தது. மும்பையிலிருந்து செய்திகளைத் தொகுத்துக் கொண்டுள்ளேன்.

 

கண்களை மூடி சிறிது நேரம் ஓய்வெடுக்க முடியவில்லை. மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலில் சிக்கியுள்ளது.

 

எவர்கள் மஹாத்மா காந்தியைக் கொன்றார்களோ, எவர்கள் பாபர் மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கினார்களோ அவர்களே 16 க்கும் மேற்பட்ட குழுக்களாக மும்பையின் தாஜ், ஓபராய் மற்றும் பல்வேறு உயர்தர ஹோட்டல்களை தன் வசப்படுத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். முதல் முறையாக "எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் குற்றம் சாட்டப்படவில்லை!"

 

இந்தத் தாக்குதலில் மும்பை ATS துறையில் தலைமை அதிகாரி ஹேமந்த் கர்கரேவும் அதில் சம்பந்தப்பட்ட மற்ற அதிகாரிகளும் குறி வைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

ஏன் இவர்கள் கொல்லப்பட வேண்டும்? காரணம் இருக்கிறது.

 

அப்போது வில்லன்.. இப்போது ஹீரோ-சங் பரிவாரின் 'நாடகம்'

 

துணிச்சலின் மறுபெயர் கார்கரே
மும்பை: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான மும்பை தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்கரேவின் மனைவி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிதியுதவியை ஏற்க மறுத்துவிட்டார். 

மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் ஹேமந்தை வில்லனாக சித்தரித்த நரேந்திர மோடி இப்போது அவர் பலியான பின் ஹீரோ என்று சொல்லிக் கொண்டு முதலைக் கண்ணீர் விட்டு வருகிறார். 

கர்கரே தான் மலேகாவ்ன் வெடிகுண்டு தாக்குதலை விசாரித்து சாத்வி பிரஞ்யா, ராணுவ லெப்டினன்ட் கர்னல், சில சுவாமிகள் ஆகியோர்கைதாகக் காரணமாக இருந்தார். 

இதையடுத்து இவரை வில்லன் போல சித்தரித்தன பாஜக, விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் போன்றவை. குறிப்பாக அத்வானியும் மோடியும்.

 

 

இந் நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் நீத்த அவரது பெயரைப் பயன்படுத்தி ஓட்டு வாங்கும் வேலையை பாஜக செய்தது. மும்பைக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்தத் தாக்குதலில் பலியான மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ. 1 கோடி வழங்குவதாக அறிவித்தார். 

ஆனால், நாட்டுக்காக கடமை செய்து தவறு செய்தவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த தனது கணவரை வில்லனாக சித்தரித்த இவர்களிடமிருந்து எந்த நிதியுதவியையும் பெற மாட்டேன் என ஹேமந்த் கர்கரேவின் மனைவி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். 

அதே போல தீவிரவாதிகளுடன் சண்டை நடந்து கொண்டிருந்தபோது பாஜக தலைவர் அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து பேட்டி தந்து ராணுவம் என்எஸ்ஜியை எரிச்சலாக்கியதைப் போல, நரேந்திர மோடி தாக்குதல் நடந்து கொண்டிருந்த ஓபராய் ஹோட்டலுக்கு அருகே வந்தையும் ராணுவமும் போலீசாரும் ரசிக்கவில்லை. 

அதிகாரிக்கு ஹேமந்த் ரகசிய கடிதம்: 

இதற்கிடையே இந்த தாக்குதலில் தான் உயிரிழக்கவும் நேரலாம் என்பதை ஹேமந்த் முன்பே அறிந்திருந்தாரோ என்னவோ தனது முக்கிய அதிகாரிக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார். 

தீவிரவாத எதிர்ப்புப் படையில் உள்ள ராகுல் கோவர்தனுக்கு அவர் அனுப்பிய ரகசிய கடிதத்தில் கூறப்பட்டுள்ள விவரங்களை கோவர்தன் விளக்க மறுத்துவிட்டார். 

மலேகாவ்ன் விசாரணை தொடர்பான சில முக்கிய விவரங்கள் அதில் அடங்கியிருப்பதாகத் தெரிகிறது. 

தீவிரவாதிகளுக்கு எதிராக தாஜ் ஹோட்டலில் தாக்குதலுக்குக் கிளம்பும் முன் இந்தத் கடிதத்தை கோவர்தனுக்கு அனுப்பிவிட்டு அதை அவருக்கு போனிலும் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் ஹேமந்த். 

சங் பரிவார்-கவலை தெரிவித்த ஹேமந்த்: 

இதற்கிடையே முன்னாள் மும்பை போலீஸ் கமிஷ்னர் ரோட்ரிகஸ் கூறுகையில், ஹேமந்த் மறைந்ததின் மூலம் மும்பை போலீசாருக்கு மாபெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மலேகாவ்ன் வழக்கு விசாரணையில் தன்னை சங் பரிவார் தவறாக சித்தரிப்பது குறித்து 5 நாட்களுக்கு முன் என்னை சந்தித்து வருத்தப்பட்டார். அதே நேரத்தில் தான் எதைப் பற்றியும் கவலைப்படப் போவதில்லை என்றும் கூறிவிட்டுச் சென்றார். 

மிக நேர்மையான அதிகாரி, இக்கட்டான கால கடத்தில் அவரை இழந்திருக்கிறோம் என்றார்.

 

நன்றி: தட்ஸ் தமிழ்

மாலேகான் வெடிகுண்டு வழக்கின் பின்னணியின் மூளையாக உள்ள பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஆகியோரின் கூட்டுச் சதியில் தொடர்புடைய பிரக்யா சிங், இராணுவ உயர் அதிகாரி புரோஹித் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுக் கொண்டும் விசாரணைகள் முழு வேகத்தில் முடுக்கி விடப்பட்டுக் கொண்டும் வரும் நேரமிது.

 

இவர்கள் அத்தனை பேரையும் கைது செய்தவர் போலீஸ் உயர் அதிகாரி கார்கரே!

 

இவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் கார்கரேவின் மேலதிகாரிகள் உட்பல பல பேரின் அச்சுறுத்தலுக்கு ஆளானார் கார்கரே! எல்.கே அத்வானி மற்றும் பிஜேபி தலைவர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் இவரது தலைக்கு குறிவைத்தனர்.

 

மும்பையில் நிகழ்ந்த இந்த பயங்கரவாதத்தின் முதல் பலி - கார்கரே தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

 

மும்பையில் உள்ள யூதர்களின் ஒரே கட்டிடமான நரிமன் ஹவுஸில் இந்த கொடூரமான நிகழ்வு முதன் முதலில் நடந்தது. நரிமன் பகுதியில் வாழும் குஜராத்தி ஹிந்துக்கள் பலர் நரிமன் ஹவுஸில் நடந்த படுகொலையே முதன் முதலாக மும்பையில் நடந்த நிகழ்வு என்று கூறுவதை பல்வேறு தொலைகாட்சிகள் நேரடி ஒளிபரப்பில் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே யூதர்களின் குடியிருப்பான இந்த நரிமன் ஹவுஸில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளதாக அவ்வப்போது கூறியுள்ளனர். ஆனால், அதனை ஒட்டிய எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 

விளைவு? எண்ணிப்பார்க்க இயலா பயங்கரம் நடந்தே விட்டது.

 

ஆம்! இஸ்ரேலின் உளவு நிறுவனமான "மொஸாத்" இந்த ஒட்டுமொத்த பயங்கரவாதச் செயலுக்குக் காரணம் என்பது தெளிவாகி விட்டது. மும்பையில் நிகழ்ந்து வரும் இந்தத் தாக்குதலுக்கு மொஸாத்தும் அதன் கூலியாட்களும் இதன் பின்னணியில் உள்ளனர் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

 

உலகமே அதிர்ந்து நின்று நேரலை நிகழ்ச்சியில் வேடிக்கை பார்த்து வரும் இத்தனை பெரிய பயங்கரவாதத்தைத் திட்டமிடவும் நிகழ்த்திக் காட்டவும் சாதாரண தீவிரவாத அமைப்புகளால் முடியாது.

 

அதே வேளையில் இத்தகைய பெரிய பயங்கரவாதத்தை இந்தியாவின் மதவாத சக்தியின் துணையில்லாமலும் நடத்த முடியாது. இந்த பயங்கரவாதத்திற்குக் காரணமான...

 

பிஜேபி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங்தள்-வி.ஹெச்.பி ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட வேண்டும்.

 

அத்வானி மற்றும் அவரது சகாக்கள் கைது செய்யப்பட வேண்டும்.

 

முன்னெச்சரிக்கையில்லா கையாலாகா சிவராஜ் பாட்டில் பதவி விலக வேண்டும்.

 

இந்திய நாட்டில் இது ஒரு கறுப்பு நாட்கள். இது இந்தியர்களுக்கும் இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்களுக்கும் வெட்கக் கேடான நாட்கள். முஸ்லிம்களும் நடுநிலை ஹிந்துக்களும் இது நாள் வரை கூறி வந்த கூற்றுக்கள் உண்மை என்று மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

 

ஆர்.எஸ்.எஸ்ஸுடம் கூட்டுச் சேர்ந்து இஸ்ரேல் இந்தியாவை நிலை குலைய மட்டுமில்லை, முற்றிலுமாக அழித்தொழிக்க திட்டமிட்டுள்ளன. இஸ்ரேலுடனான உறவை இந்தியா உடனடியாக அறுத்தொழிக்க வேண்டும்.

 

வீரத் தியாகி கார்கரேவிற்கும் அவருடன் துணிச்சலாக ஹிந்துத்துவ பயங்கரத்தை உலகிற்கு வெளிப்படுத்திய அவரது ATS குழுவிற்கும் இந்தியர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

 

உருது டைம்ஸ் இதழில் வெளியான புகைப்படத்தில் மொஸாத் மற்றும் எக்ஸ் மொஸாத் நபர்கள் இந்தியாவிற்கு வந்ததும் ஹிந்துத்துவா சாதுக்கள் பலரைச் சந்தித்து திட்டமிட்டதும் வெளியாகியுள்ளது. மிகப் பெரிய சதித்திட்டம் வீதிக்கு வந்துள்ளது.

 

இது உணர்ச்சி வசப்பட வேண்டிய நேரம் அல்ல. ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம், முக்கியமாக இந்தியாவிலுள்ள ஹிந்துக்களாகிய நாம்! காந்தியைக் கொன்ற கயவர்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளனர்.

 

தூய சனாதானக் கொள்கையைப் பின்பற்றக் கூடிய இந்துக்களாகிய நாம், தேசத்தின் மீது தூய பற்றுக் கொண்டவர்களாக உள்ளோம்.  இங்கே ஹிந்துத்துவாக்கள் செய்து கொண்டிருப்பது தேச விரோத செயல் என்பதை தாய் நாட்டை நேசிக்கும் நாம் முழுமையாகப் புரிந்து அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். பிரக்யா சிங், அத்வானி போன்ற முழு நேர தேச விரோதிகளை இனம் காண வேண்டும். இவர்கள் அழிக்கப் பட வேண்டியவர்கள். ஹிந்துக்களில் இவர்கள் சார்பாக சிந்திப்பவர்கள், அதன் மூலம் விளையும் பாதகங்களை எண்ணிப் பார்க்கவேண்டும்.

 

இது ஒரு தேசியம் சார்ந்த கேள்வி!

 

நாட்டை சுடுகாடாக்கும் மதவெறிபிடித்த ஹிந்துத்துவாவுடன் இந்துக்கள் போரிட வேண்டும். தேவைப்பட்டால் இந்த இஸ்ரேலுடன் கை கோர்த்து நாட்டை நிர்மூலமாக்கும் இந்த நாச சக்திகளுடன் இந்துக்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் உள்நாட்டுப்போர் கூட நிகழ்த்தத் தயாராக வேண்டும்.

 அமரேஷ் மிஸ்ரா(+91-9250305699)

நன்றி:சத்தியமார்க்கம்.காம்

Read more...

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தவை!

>> ஞாயிறு, 23 நவம்பர், 2008

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தவை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை தேங்கை முனீப் on Wednesday, November 12th, 2008
எங்கேனும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நடந்தால் சற்றும் யோசிக்காமல் முஸ்லிம் தீவிரவாதி இஸ்லாமியத் தீவிரவாதம் என்று செய்திகளை வெளியிட்டு முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க ஊடகங்கள் தயங்குவதில்லை. மாலேகானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவம் திட்டமிட்டு சங் பரிவார் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டமை இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஒட்டுத் தாடிகளுடன் இஸ்லாமிய வேடமிட்டு குண்டு வெடிப்பு நடத்தி முஸ்லிம்களைக் குற்றவாளிகளாக்க முயன்றவர்களின் சதியை வல்ல இறைவன் அம்பலப் படுத்திவிட்டான்! ஆனால் வழக்கமாக ஊடகங்களின் பார்வையில் இது ஒரு செய்தியாகப் படவில்லை.

டெல்லி குண்டு வெடிப்பில் பக்கம் பக்கமாக எழுதி இஸ்லாமைத் தூற்றிய இந்தியா டுடே ஆகட்டும், பள்ளிவாசலில் குண்டு வெடித்தால் பள்ளி வாசலில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது என்று செய்தியைத் திரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாசிசப் பத்திரிக்கை தினமலராகட்டும், எதுவுமே இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ள மாலேகான் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகளில் அவ்வளவு அக்கரை காட்டவில்லை. காரணம் வெளிப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருந்த அவர்களின் கோர முகங்கள்!

குண்டு வெடிப்பில் அதிகம் பேர் கொல்லப்படவில்லை என்பதற்காகக் கவலை கொள்ளும் பெண் (சாத்தவி?) பயங்கரவாதி பரக்யாசிங் தாக்கூராகட்டும், அவளுக்கு சுக்கான் பிடிக்கும் பா.ஜ.க, விஸ்வ இந்து பரிசத் இந்துத் துவ வாதிகளாகட்டும், அப்பாவிகளைக் கொல்லக் கூடாது என்ற எந்த இங்கிதமும் இவர்களுக்குக் கிடையாது. இதனால் தான் கைதானவர்கள் விடுதலையாக சங்பரிவார் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் ஊடகங்கள் தீவிரவாதத்துக்கு எதிரான ஒழுக்கப் பயிற்சிகளும், பொதுக் கூட்டங்களும், மாநாடுகளும், கருத்தரங்கங்களும் அதிக அளவில் நடத்துவது முஸ்pலம்கள் தான் என்பதை மறந்து விடுகின்றன. இஸ்லாமிய அறிஞர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சிகளில் ஏராளமான இளைஞர்கள் பங்கு பெற்று ஒழுக்கமுள்ள சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் ஒரு பக்கம் வளர்ந்து வரும்போது இன்னொரு பக்கம் சங்பரிவார் தன் தொண்டர்களுக்கு ஆயுதப் பயிற்சியும், வெடிகுண்டு வைக்கும் பயிற்சியும் அளித்து வருகிறது. இவை அத்தனையும் ராணுவத்தின் உதவியுடன் நடைபெறுகிறது. ராணுவத்தில் உயர் பதவி வகிப்பவர்கள் கூட இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் அளவுக்கு இந்திய ராணுவத்தில் பயங்கரவாத நோய் பீடித்துள்ளது.

இப்போது இந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடைய ராணுவத்தில் இன்டலிஜன்ஸ் பிரிவில் பணியாற்றிய லெஃப்டினெண்ட் கேணல் பிரசாத் புரோகித் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கஷ்மீரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது ராணுவத்தின் நிதியிலிருந்து ரகசியமாக பணத்தை தீவிரவாத இயக்கங்களுக்கு மாற்றியுள்ளார். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகிய ஸமீர் குல்கர்னி என்பவன் பல முறை கஷ்மீரில் வைத்து இவரை சந்தித்ததும் வெளிப்பட்டுள்ளது. (செய்தி: மாத்யமம்)

சங்கப் பரிவார் திட்ட மிட்டு தன் தொண்டர்களை ராணுவத்தில் சேர ஊக்குவித்து வருகிறது. கஷ்மீரில் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மிகப்பெரிய ராணுவ அதிகாரிகளின் உதவியுடன் சங்பரிவார் தீவிரவாதிகளுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க இத்தகைய சம்பவங்களைக் காரணம் காட்டி முஸ்லிம் இளைஞர்களை காவல் துறை வேட்டையாடி வருகிறது. முஸ்லிம் இளைஞர்களை பிடித்துச் சென்று பின்னர் சுட்டுக் கொலை செய்து விட்டு என்கவுண்டர் என்று திருப்பி விடுகிறது. பத்திரிக்கைகளும் முஸ்லிம் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை என்று தலைப்புச் செய்திகள் வெளியிடுகிறது. ஜாமிஆ நகரில் இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவி மாணவர்கள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது போன்று இன்னொரு சம்பவத்தை நிறைவேற்ற மாறு வேடத்தில் காரில் வந்து இளைஞர்களைக் கடத்திச் செல்ல முற்பட்ட போலீஸ் அதிகாரி டெல்லியில் பிடிபட்டுள்ளார். இப்படிப் பட்ட போலி என்கவுண்டர்கள் ஏராளம். இவ்வாறு செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் முஸ்லிம்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபணமானால் மட்டும் செய்திகளை தந்திரமாக இருட்டடிப்பு செய்து விடுகின்றன.
அவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்பட்ட உரு செய்திதான் ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் கடந்த வருடம் நடந்த குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்ட சம்பவம்.

இவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் குற்றத்தை நிரூபிப்பதில் அரசு வழக்குரைஞர் தோல்வியடைந்து விட்டதாக நீதி மன்றம் கூறுகிறது. இவர்களுக்கு இழப்பீடாக உதவித் தொகைகளும் ஆட்டோ வும் அரசாங்கம் வழங்குவதாக உறுதி செய்துள்ளது.

இதில் கைது செய்யப்பட்ட ஒருவரை அரக்கத் தனமாக சித்திர வதை செய்து, குண்டு வைத்ததாக ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்கவுண்டர் நடத்தி விடுவதாக காவல் துறை மிரட்டியதை விடுதலையான இம்ரான் என்ற இளைஞர் கூறுகிறார். (நன்றி: சத்திய மார்க்கம்.காம்)

ஆக ராணுவம் முதற் கொண்டு காவல் துறை வரை கொடிய எண்ணமுடையவர்கள் செயல்பட்டுக் கொண்டிரு ப்பது இதன் மூலம தெரிய வருகிறது.

இதற்கிடையில் மாலேகான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் தான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பையும் நடத்தியிருக்கக் கூடும் என்று இவ்வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது குறித்து இப்போது விசாரணை மேற்கொள்ளப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறைக்கப்பட்ட இந்து பயங்கரவாதத்தின் கோர முகம் இதிலிருந்து வெளிப்பட்டுள்ளது. எனினும் ஊடகங்கள் இதிலும் ஒரு சார்பு நிலையைத் தான் கடைபிடித்து வருகிறது. முஸ்லிம் சமுதாயம் தனக்கென ஒரு உறுதியான செய்திஊடகத்தை உருவாக்குவதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.                                                                                                                                                                                           
நன்றி: இஸ்லாம்கல்வி.காம்

Read more...

இஸ்லாமுக்கு மாறினார் மைக்கேல் ஜாக்சன்

>> சனி, 22 நவம்பர், 2008

இஸ்லாமுக்கு மாறினார் மைக்கேல் ஜாக்சன்-பஹ்ரைனில் செட்டிலாகிறார்
வெள்ளிக்கிழமை, நவம்பர் 21, 2008, 18:8

லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார். 

பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். 

பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்: 

மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது மத மாற்றம் குறித்து நெருக்கமானவர்களிடம் ஜாக்சன் பேசுகையில், எனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு சரியான மதமாக இஸ்லாம் உள்ளது. யூதர்கள் எல்லாம் ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் எனக் கூறினாராம் ஜாக்சன்.


தொடர்ந்து ஜாக்சன் கூறுகையில், இந்த அட்டைப் பூச்சிகளால் நான் மிகவும் சோர்வடைந்து விட்டேன். யூதர்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறார்கள். மிகப் பெரிய வீடுகளைக் கட்டிக் கொள்கிறார்கள், கார்கள், வசதிகள் என சந்தோஷமாக இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களின் சதி செயலால் கிடைப்பவை. 

விரைவில் எனது ஸ்டுடியோவையும், சொத்துக்களையும் அமெரிக்காவிலிருந்து பஹ்ரைனுக்கு மாற்றிக் கொள்ளப் போகிறேன். அமெரிக்காவில் இதுவரை எனக்குக் கிடைக்காத சுதந்திரம் பஹ்ரைனில் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜாக்சன். 

சமீபத்தில் லாஸ் ஏஞ்செலஸில் உள்ள தனது நண்பரின் வீட்டில், குரான் முன்பு தான் இஸ்லாமில் நம்பி்ககை வைத்துள்ளதாக சத்தியம் செய்தாராம் ஜாக்சன். அங்குதான் அவர் முறைப்படி இஸ்லாமியராகவும் மாறினார் என்று கூறப்படுகிறது. 

எளிமையாக நடந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு இமாம் கலந்து கொண்டுள்ளார். தரையில்,விரிக்கப்பட்டிருந்த துணியில், தலையில் தொப்பியோடு ஜாக்சன் அமர்ந்திருக்க, அவருக்கு இஸ்லாம் மத மார்க்கப்படி மத மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

ஷேக் போட்ட வழக்கு: 

இதற்கிடையே, பஹ்ரைன் இளவரசர் அப்துல்லா அல் கலீபா ஜாக்சன் மீது லண்டன் கோர்ட்டில் தொடர்ந்துள்ள ஒரு வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. அதில் ஜாக்சன் ஆஜராக வேண்டும். இந்த நிலையில் அவரது மத மாற்ற செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் அவர் பஹ்ரைனில் குடியேறப் போவதாகவம் அந்த செய்தி கூறுவது முக்கியத்துவம் வாய்ந்தது. 
ரெக்கார்டிங் காண்டிராக்டை ஜாக்சன் மீறியதாக பஹ்ரைன் இளவரசர் லண்டன் கோர்ட்டில் வழக்கு

 
தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



 


நன்றி: தட்ஸ்தமிழ்.காம்


Read more...

அமீரகத்தில் சங்பரிவாரின் ஊடுருவலா?

ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் பேசும் மக்களுக்காக சக்தி என்ற பெயரில் பண்பலை தொடங்கப்பட்டது. சமீப காலமாக அதன் செய்திகளில் கூறப்ப்டும் வார்த்தைகளில் இருந்து அதிலும் சங்பரிவாரத்தின் ஊடுருவல் இருக்குமோ? என்ற சந்தேகம் தமிழ் பேசும் மக்களிடையே எழுந்திருக்கிறது. உதாரணத்திற்க்கு தற்ப்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுவரும் மாலேகான் குண்டு வெடிப்பில் பெண் சன்னியசினி பிரக்யா சிங், இராணுவத்தில் முக்கிய பங்கு வகித்த கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோருடைய தொடர்பை ப்ற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இதை அமீரகதில் உள்ள மழையால மொழி வானொலிகளாம் ஆசியா நெட், ரேடியோ ஆசியா மற்றும் இந்தி மொழி அலவரிசை செய்திகளில் உண்மையை சொல்லி கொண்டிருக்கும் நிலையில் இதை பற்றி தமிழ் சக்தி ரேடியோ அலைவரிசை வாயை திறக்காததின் மர்மம் என்ன? ஆனால் இந்தினேசியாவில் நடந்த ஒரு குண்டு வெடிப்பை பற்றி கூறும் போது மட்டும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என குறிப்பிடுகின்றது பாரபட்சம் இல்லாமல் முக்கிய செய்திகளை தருவதுதான் செய்தி தர்மம். அதை விடுத்து மத துவேசத்தை வளர்க்கும் வகையில் அதுவும் சகோதரத்துவத்தை பேணும் தமிழ் மக்களிடயேன செய்திகளை தரும் சக்தி வானொலி தன்னை திருத்திக்கொள்ள முன் வருமா? அல்லது சகோதரத்துவத்தை விரும்பும் சகொதரர்கள் முயற்ச்சி மூலமாக தனக்கு மூடு விழா நடத்திக்கொள்ளும் சூழக்கு தன்னை தள்ளிக் கொள்ளுமா? காலம்தான் பதில் சொல்லும்

Read more...

மரணத்திற்க்கு பின் (பாகம்-2)

>> சனி, 26 ஜனவரி, 2008

Read more...

மரணத்திற்க்கு பின் (பாகம்-1)

>> வெள்ளி, 25 ஜனவரி, 2008

Read more...

அபுதாபியில் நடைபெற்ற கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா!

சத்திய மார்க்கத்தை பிறமக்களும் அறிந்து கொள்ள ஓர் வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதற்காக முஸ்லிம் அல்லாத மக்கள் மட்டும் பங்கேற்க்கும் 'கட்டுரை போட்டி' யினை தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அபுதாபி கிளை கடந்த 4 வருடங்களாக நடத்தி வருகிறது. அதனடிப்படையில் இந்த ஆண்டு (2007) 'இன்றை நவீன உலகில் இஸ்லாம்' எனும் தலைப்பினை அறிவிப்பு செய்து அழைப்பு விடுத்தது.
இக்கட்டுரைப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராக அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசகர் சகோ. ஃபஜ்லுல்லாஹ் அவர்கள் செயல்பட்டார்கள். இதனை தொடர்ந்து பல்வேறு முஸ்லிமல்லாத அன்பர்களிடமிருந்து பல கட்டுரைகள் வந்து சேர்ந்தன. இக்கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்ந்து எடுத்து, அவற்றிற்கு பரிசுகளும் நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்காக ஓர் பரிசளிப்பு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அவ்விழாவுடன் இஸ்லாம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியினையும் (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்தது.
கடந்த 28-12-2007 அன்று அபுதாபி நஜ்தா ரோட்டில் அமைந்திருக்கும் ஏர்லைன்ஸ் ரெஸ்டாரன்ட் ஹாலில் வைத்து இந்நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ். இந்நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ. முஹம்மது ஷேக் அவர்கள் தலைமை தாங்கினார்.
கட்டுரை போட்டியில் பங்குபெற்ற கட்டுரைகள் குறித்த நிறைகள், அதில் எழுப்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் போன்றவைகளை தொகுத்து முன்னுரை வழங்கப்பட்டது. இம்முன்னுரையினை அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசகர் சகோ. யுசுப் அலி அவர்கள் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பரிசளிப்பு நடைபெற்றது. முஸ்லிம் அல்லாத அன்பர்கள் மட்டும் கலந்து கொண்ட 'இன்றை நவீன உலகில் இஸ்லாம்' கட்டுரைப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் விபரம்:
1. முதல் பரிசு : சகோதரி. ஸ்ரீ தேவி முத்துக்குமரன்
2. இரண்டாவது பரிசு: சகோதரர்: ரமேஷ் கண்ணன்
3. மூன்றாவது பரிசு: சகோதரர்: துரை
பரிசளிப்பினை தொடர்ந்து 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' எனும் தலைப்பில் அமீரக TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் இஸ்லாம் குறித்த அறிமுக உரையினை நிகழ்த்தினார்கள். அறிமுக உரையினை தொடர்ந்து இஸ்லாம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முஸ்லிமல்லாத சகோதரர்களின் ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்கு சகோ. ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் பதிலளித்தார்கள்.


இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிற மத சகேதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த அரிய பல உண்மைகளை தெரிந்து கொண்டனர். அல்ஹம்துலிலல்லாஹ். அபுதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத் துணைதலைவர் சகோ. ஷேக் முஹம்மது அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.


இறுதியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அபுதாபி மண்டல பொருளாளர் சகோ. சுல்தான் சலாஹுதீன் தலைமையில் தொண்டரணியினர் சிறப்பாக செய்திருந்தனர். முஸாஃபா பகுதியிலிருந்து ஏராளமான சகோதரர்கள் கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகளை முஸாஃபா கிளை தலைவர் அப்துல்லாஹ் தலைமையில் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடந்த மூன்று வருட முதல் பரிசு கட்டுரைகளின் தொகுப்பு, சகோ. பி.ஜெ அவர்கள் உரையாற்றிய 'உலக அதிசயம் எது' CD மற்றும் 'அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்' புத்தகம் போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே!!!!

Read more...

நடந்து வந்த பாதை

நடந்து வந்த பாதைகளில் பூக்கள் இல்லைமுட் படுக்கைதான் இருந்தது!கடந்து வந்த நாட்கள் எல்லாம் தென்றல் வீசவில்லை வாடை காற்றுகளே!துரத்துகின்ற துரோகங்கள்! விரட்டுகின்ற ஏமாற்றங்கள்!ஒதுங்கிவிட்ட நட்புகள்!விலகிவிட்ட உறவுகள்!இருந்த போதிலும்!!!இரும்பினால் செய்யப்பட்ட பாதங்களும் நரம்பினால் பின்னப்பட்ட நம்பிக்கைகளும்என்னுடன் இருக்கும் வரை தோல்வி என்னை தொடுவதாகவும் இல்லைவெற்றி என்னை விடுவதாகவும் இல்லை.(இறைவன் நாடினால்)

Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP